September 10, 2023 தண்டோரா குழு
கோவையில் மரங்களை காப்போம் என்பதை வலியுறுத்தி 96 மாணவ,மாணவிகள் இணைந்து கைகளில் மரக்கன்றுகள் ஏந்தியபடி சுப்த வீராசனம் செய்து உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.
யோகாவில் வஜ்ஜிராசனம் போலவே சுப்த வீராசனம் சீரணக் கோளாறுகளை சீர் செய்து வயிற்று உள் உறுப்புகளின் செயல்பாடுகளை சரி வர இயங்க செய்கிறது.இந்நிலையில் நமது உடல் பாகங்களை சீராக்குவது போல பூமி வெப்பமயமாதலை தடுக்க மரம் நடுவதன் அவசியத்தை வலியுறுத்தி கோவையில் பள்ளி மாணவ,மாணவிகள் இணைந்து மரக்கன்றுகளை கைகளில் ஏந்தியபடி சுப்த வீராசனம் செய்து அசத்தியுள்ளனர்.
சரவணம்பட்டியில் உள்ள விவேகம் பள்ளியின் யோகா ஆசிரியை திலகவதி ஒருங்கிணைத்த இந்நிகழ்ச்சியில் சுமார் ஆறு வயது முதல் பதினைந்து வயது மாணவ,மாணவிகள் தொடர்ந்து 30 நிமிடம் சுப்த வீராசனத்தை மரக்கன் றுகளை ஏந்தியபடி செய்தனர்.96 மாணவ, மாணவிகள் இணைந்து செய்த இந்நிகழ்வு சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது.
தொடர்ந்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த மாணவ,மாணவிகள் பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.