September 15, 2023
தண்டோரா குழு
கோவை ஐயப்பன் பூஜா சங்கம் சார்பில் சமூகத்திற்கு பல உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ராம் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் மான்யத் துவக்க பள்ளியை சேர்ந்த 170 குழந்தைகளுக்கு நேற்று இலவசமாக சீருடைகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் இப்பள்ளியின் முன்னாள் ஆசிரியரும் தற்போதைய பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவருமான கல்யாண வெங்கட்ரமணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். உடன் சங்கத்தின் கமிட்டி தலைவர் நடராஜன்,செயலர் கணேசன்,பொருளாளர் லக்ஷ்மிநாராயணன், உறுப்பினர் முகுந்தன் மற்றும் மேலாளர் ஸ்ரீ ராம் ஆகியோர் இருந்தனர்.