• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

புதிய ரயில் நிறுத்த வளாகம் அமைத்திட ஒப்புதல் வழங்கிடுக – பி.ஆர்.நடராஜன் எம்பி.,

September 18, 2023 தண்டோரா குழு

கோவை சந்திப்பு ரயில் நிலையம் மற்றும் போத்தனூர் சந்திப்பு ரயில் நிலையத்தில். புதிய ரயில் பெட்டிகள் நிறுத்தி பராமரிக்க, பிட் லைன் அமைத்திட புதிய ரயில் நிறுத்த வளாகம் அமைத்திட ஒப்புதல் அளித்திட வலியுறுத்தி கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் ரயில்வே வாரிய தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் மேலும் கூறியுள்ளதாவது,

கோயம்புத்தூர் தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாகும். தென்னக இரயில்வேயில் அதிக வருமானம் ஈட்டும் நிலையங்களில் கோயம்புத்தூர் சந்திப்பு மூன்றாவது இடத்தில் உள்ளது. அத்தகைய சிறப்பு மிக்க பகுதியில் இருந்து புதிய ரயில்கள் இயக்க கோரிக்கைகள் வைக்கும் போதெல்லாம் ரயில்வே நிர்வாகம், கோவை சந்திப்பு ரயில் நிலையத்தில் ரயில் பெட்டிகள் நிறுத்திட போதிய இடவசதி இல்லாததால் புதிய ரயில்கள் அறிவிக்க இயலவில்லை என்கிற காரணத்தை சொல்வி வருகிறது.

இதனால்,கோவை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள போத்தனூர் சந்திப்பு ரயில் நிலையத்தில் பெட்டிகள் நிறுத்துமிடம் மற்றும் பராமரிப்பு மையம் அமைத்திட வேண்டும் கோரிக்கை எழுந்துள்ளது. ஆனாலும், இக்கோரிக்கை, இதுவரை நிறைவேற்றப்படாமல் உள்ளது. சமீபத்தில் சேலம் ரயில்வே கோட்டம் இதற்கென அனுப்பிய முன்மொழிவுகள் குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று அறிகிறேன்.

போத்தனூர் ரயில் நிலையத்தில் புதிய ரயில் பெட்டிகள் நிறுத்திமிடம் மற்றும் பராமரிப்பு மையம் 3 பிட் லைன்கள் மற்றும் 4 ஸ்டேபிலிங் லைன்களுடன் அமைத்திட தென்னக இரயில்வே பொதுமேலாளர் ஒப்புதலுடன், ரயில்வே வாரியத்தின் நிர்வாக இயக்குநர் (பணிகள்) அவர்களுக்கு அனுப்பப்பட்ட முன்மொழிவு இன்னும் நிலுவையில் உள்ளது.

ரயில் பெட்டிகள் நிறுத்திமிடம் மற்றும் பராமரிப்பு மையம் புதிதாக அமைத்திடாமல், கோவையில் இருந்து புதிய ரயில்கள் சாத்தியம் இல்லை என்ற சூழல் உள்ளது. எனவே, கொடுக்கப்பட்ட முன்மொழிவுகள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்திட வேண்டுகிறேன். மேலும், இதனை நடைமுறைப்படுத்துவது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை தெரிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க