September 29, 2023
தண்டோரா குழு
தீயணைப்பு சேவை மற்றும் மீட்புக் குழுவின் சார்பாக செயல்முறை வழிகாட்டுதல் பயிற்சி தி சம்ஹிதா அகாடமி பள்ளியில் நடைபெற்றது.
இந்தப் பயிற்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, பயிற்சியாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு மாணவர்கள் ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் கலந்துகொண்டு திறம்பட பதில் அளித்தனர்.
செயல்முறைப் பயிற்சியில் மாணவர்களும் பங்கு கொண்டு உற்சாகமடைந்தனர். இப்பயிற்சி அனைத்துத் தரப்பு மக்களும் புரிந்து கொண்டு பயன்பெரும் வண்ணம் அமைந்தது. மனித சேவையின் மகத்தான பணியாக இச்சேவை அமைந்துள்ளது. பயிற்சியின் முடிவில் நன்றியுரை நவிழப்பட்டது.