October 4, 2023 தண்டோரா குழு
கோவை காந்தி பார்க் ரவுண்டானா அருகே தமிழ்நாடு விஸ்வகமா சமூக சங்கங்களின் கூட்டமைப்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை நகை தயாரிப்பாளர் சங்க தலைவர் முத்து வெங்கட்ராமனை கைது செய்து நடவடிக்கை கோரியும் தமிழக அரசு விஸ்வகர்மா சமூகத்தினருக்கு பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய விஸ்வகர்மா அமைப்பை சேர்ந்த பாண்டியன் கூறும்போது,
விஸ்வகர்மா சமுதாயத்தில் அனைத்து சாதியினரும் அனைத்தும் மதத்தினரையும் சேர்க்க வேண்டும் என்று தங்க நகை தயாரிப்பாளர் சங்கம் தலைவர் முத்து வெங்கட்ராம் மீது சமுதாய அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.பாரம்பரியத்தின் அடையாளமாக விளங்கும் விஸ்வகர்மா 5 தொழிலுக்கான தச்சுத் தொழில், நகை தொழில்,சிற்பத் தொழில்,பாத்திரம் தயாரிக்கும் தொழில்,இரும்பு வேலை செய்பவர்களுக்கு விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் மூலம் கலந்து உறவினர் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழக அரசின் அறநிலைதுறையின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதான ஆலயங்களில் சாமி தங்க நகைகளை பராமரிக்க தலா ஒரு பொற்கொல்லர்யும்,தேர் மற்றும் ஆலய சாமி புறப்பட வாகனங்கள் பராமரிக்க மர தச்சர் ஒருவரையும் நிரந்தர பணியாளராக நியமிக்க கோரிக்கை வைத்துள்ளனர். தேர்தல் வாக்குறுதலில் கொடுக்கப்பட்ட விஸ்வகர்மா சமுதாயத்திற்கு இட ஒதுக்கீட்டில் 5% உள் ஒதுக்கீடு வழங்க வேண்டியும் சென்னை, கோவை,திருச்சி, சேலம்,ஓசூர் பகுதியில் தங்க நகை பூங்காகள் மற்றும் பர்னிச்சர் கைவினப் பொருள்கள் விற்பனைக் கூடங்கள் அமைத்து தர வலியுறுத்தினர்.
பாரம்பரியமிக்க சிற்பக் கலையில் சிறந்து விளங்கும் விஸ்வகர்மா ஸ்பதிகளுக்கு தமிழக அரசு உயர் விருதுகள் வழங்கி குறிக்க வேண்டும் எனவும் மகிழ்வதும் இரும்பு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு தமிழக அரசு மானியத்துடன் கூடிய கடன் உதவி மற்றும் இலவச மின்சார வழங்கிட வலியுறுத்தினர்.