October 24, 2023 தண்டோரா குழு
கோயம்புத்துார் திருச்சி சாலையில் ராஜ்குமார் டென்டஸ்ட்ரி கடந்த 27 ஆண்டுகளாக செயல்பட்டு சேவை செய்து வருகிறது. இந்த மருத்துவமனை தற்போது சுங்கம் அருகில் உள்ள ருக்மணி நகரில் சுப்ரமணியம் லே அவுட்டில் புதிய கட்டடத்தில் தனது செயல்பாட்டை துவங்கியுள்ளது.
இது குறித்து ராஜ்குமார் டென்டிஸ்ட்ரி மருத்துவமனையின் தலைமை பல் மருத்துவர் டாக்டர் ராஜ்குமார் கூறுகையில்:-
உலக அளவில் உள்ள அதிநவீன தொழில்நுட்ப இயந்திரங்களை ராஜ்குமார் டென்டிஸ்ட்ரி அறிமுகம் செய்து, சிறப்பான பல் சிகிச்சை அளித்து வருகிறது. நோயாளிகளுக்கு இது மிகுந்த திருப்தியையும் மகிழ்ச்சியை தருகிறது.
டாக்டர் ராஜ்குமார் பல் மருத்துவமனை தற்போது புதிய கட்டடத்திற்கு மாறியுள்ளது. பல்வேறு அதிநவீன வசதிகள் இடம் பெற்றுள்ளன.
கொங்கு மண்டலத்தில் மிக வேகமான செயற்கை பற்களை உற்பத்தி செய்யும் நவீன துல்லிய அதிகவேக பல் மில்லிங் இயந்திரத்தை முதல் முறையாக கோவையில் அறிமுகம் செய்கிறது. புதுமையான கண்டுபிடிப்பு கொண்ட தொழில் நுட்பங்களுடன் சரியான சிகிச்சை முறையை ஆராய்ந்து தெரிவிக்கும் மென்பொருட்களையும் கொண்டுள்ளது.
மருத்துவமனையில் உள்ள புதிய ஆய்வகத்தில், 3டி பிரிண்டிங் வசதியும் உள்ளதால், நிரந்தர பற்களை உருவாக்குவது எளிதாகிறது. செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி 3டி மென்பொருள் பயன்படுத்தி நவீன சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
புதிய கிளினிக்கை, முன்னாள் இஸ்ரோ செயற்கை கோள் மையத்தின் முன்னாள் இயக்குனரும் தமிழ்நாடு அறிவியில் தொழில்நுட்ப கவுன்சில் துணைத்தலைவர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை துவக்கி வைத்து பேசியதாவது:
ராஜ்குமார் டென்டிஸ்ட்ரியில் சில மணி நேரங்களிலேயே சிகிச்சை பெறும் வசதிகள் உள்ளன. புதிய பல் உருவாக்கி, உடனே பொருத்தி விரைவான சிகிச்சை பெற முடியும். அதற்கான உலத்தரம் வாய்ந்த நவீன தொழில்நுட்ப கருவியை இங்குள்ளது. இதனால் உலத்தரம் வாய்ந்த பல் சிகிச்சையை கோவையில் பெற முடியும். அனுபவமிக்க, மருத்துவர்கள், கையாளும் தொழில்நுட்பம் அறிந்த பணியாளர்கள் இருப்பது மேலும் சிறப்பு சேர்க்கிறது. விக்ரம் லேண்டரின் l ஆயுட்காலம் 14 நாட்கள் மட்டுமே. பிரக்ஞான் அலைவரிசை விக்ரம் அலைவரிசை இரண்டும் இணைந்தால்தான் தகவல் கிடைக்கும்.
இப்போது பிரக்ஞான் உயிரோடு இருந்தாலும் செய்தி பரிமாற்றம் இருக்காது.ககன்யான் திட்டம் அதிகபட்ச முன்னெச்சரிக்கையாக செய்யப்பட்டுள்ளது. ககன்யான் கடைசி நொடியில் நிறுத்தப்பட்டு, அடுத்த அரை மணி நேரத்தில் மீண்டும் செலுத்தப்பட்டது. இது இந்திய விண்வெளி துறையில் சிறப்பானதாக இருக்கும்.
குலசேகரப்பட்டினம் ஏவுதளம் அமைப்பதை தாண்டி எரிபொருள் தயாரிப்பது உட்பட மேலும் பல திட்டங்களை கொண்டு செயல்பட,அது சிக்கனமான ஏவுதளமாக அமையும். சிறிய ரக செயற்கைக்கோள்கள் தான் இப்போது அனுப்பப்டுகின்றன. தினமும் ஒன்று இரண்டு அனுப்பும் நிலை வரலாம். அப்போது சிறப்பான இடமாக குலசேகரப்பட்டினம் ஏவுதலும் இருக்கும்.
சர்வதேச விண்வெளி மையத்தில் போட்டிகள் கூடாது. அங்கு அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து இயங்க வேண்டும். அதனை இந்தியா வழிநடத்த வேண்டும். நிலவில் மனிதர்களை அனுப்ப அமெரிக்க முயற்சி எடுத்து வருகிறது, சில வருடங்களில் அது நடக்கும். இந்தியா நிலாவிற்கு மனிதர்களை அனுப்ப இன்னும் பத்து ஆண்டுகள் ஆகும். ஆயுட் காலம் நிறைவடைந்த பின், விண்களங்களை திரும்பக் கொண்டு வருவது குறித்து, இப்போது ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
டாக்டர் அருணா ராஜ்குமார் பேசுகையில்,”
புதிய தொழில்நுட்பம் மற்றும் நோயாளிகளுக்கான கவனிப்பில் இந்த மருத்துவமனை அதிக கவனம் செலுத்துகிறது. நோயாளிகள் இந்த மருத்துவமனைக்கு பல முறை வந்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஒரு முறை வந்தாலே சிகிச்சை பெற்று செல்ல முடியும். நேரத்தை மிச்சப்படுத்தி, சிரமத்தையும் குறைக்கிறது,” என்றார்.