November 7, 2023
பி.எஸ்.ஜி செவிலிய கல்லூரி தனது பெருமையையும் பாரம்பரத்தையும் பறைசாற்றும் வகையில் தங்களின் நிறுவன தினத்தை செவ்வாய்க்கிழமை, அன்று பி.எஸ்.ஜி மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவன கலையரங்கத்தில் கொண்டாடியது.
பி.எஸ்.ஜி அறக்கட்டளை முதலில் தனது மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை 1985லும், பி.எஸ்.ஜி மருத்துவமனையை 1989லும் தொடங்கியது. சுகாதார நலத்துறையில் செவிலியரின் இன்றியமையாத பங்களிப்பினை உணர்ந்து, 1994 நவம்பர் 7ஆம் நாள் பி.எஸ்.ஜி செவிலிய கல்லூரி தொடங்கபட்டது. பலரின் ஒருங்கிணைந்த செயலாலும் அர்ப்பணிப்பாலும் இந்த நிறுவனம் தனித்துவத்துடன் இயங்கி வருகின்றது.
இவ்விழாவில், சிறப்பு விருந்தினர் டாக்டர் சுதா சேஷய்யன், எம்.எஸ்., பி.ஜி.டி.பி., தமிழ்நாடு டாக்டர்.எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர், பி.எஸ்.ஜி. அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் உயர்திரு.எல்.கோபாலகிருஷ்ணன், டாக்டர்.ஏ .ஜெயசுதா, முதல்வர், பி.எஸ்.ஜி செவிலிய கல்லூரி மற்றும் விருது பெற்ற முன்னாள் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
பிஎஸ்ஜி செவிலியர் கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் டாக்டர்.ஏ.ஜெயசுதா வரவேற்புரையாற்றினார். மேலும் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவிய அனைவரின் கடின உழைப்பையும் , ஆதரவையும் நினைவு கூர்ந்து நன்றி தெரிவித்தார்.நிறுவன அறங்காவலர் மற்றும் நிர்வாக அறங்காவலர்களின் அளவிட முடியாத பங்களிப்புகளை அவர் குறிப்பிட்டார்.
பி.எஸ்.ஜி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் எல்.கோபாலகிருஷ்ணன், அவர்கள் விழாவிற்கு தலைமை வகித்து, பி.எஸ்.ஜி செவிலிய கல்லூரியின் வானளாவிய வளர்ச்சியை பற்றி புகழ்ந்து பேசினார்.விருதினை பெற்ற முன்னாள் மாணவர்கள் தங்கள் துறைக்கும் இந்த கல்லூரிக்கும் தங்கள் தொடர் கடின உழைப்பால் பெருமை சேர்த்துள்ளதாக உளமார பாராட்டினார்.
பி.எஸ்.ஜி செவிலியர் கல்லூரியானது Dr.S.வள்ளியம்மாள், RN RM Ph.D (N), (B.Sc (N) 1995 – 1999) விரிவுரையாளர், செவிலியர் கல்லூரி, நிம்ஹான்ஸ், பெங்களூரு; Dr. சிவபாலன். T, RN RM Ph.D (N),PDF, FAIMER Fellow., (B.Sc (N) 1996 – 2000); முதல்வர், போன்சாலா செவிலியர் நிறுவனம், நாசிக்; Dr.ஜமுனா ராணி.R, RN RM Ph.D ( N), (B.Sc (N) 1997 – 2001), இணைப் பேராசிரியர், எய்ம்ஸ்-கல்யாணி, அவர்களுக்கு “சிறந்த முன்னாள் மாணவர் விருது, 2023” வழங்கி கவுரவப்படுத்தியது.
சிறப்பு விருதினை பெற்றவர்கள் தங்களை கவுரவ படுத்தியதற்கு நன்றி பாராட்டி, இக்கல்லூரியின் மாணவ மாணவிகள் என்பதில் பெருமிதம் அடைவதாக கூறினர்.
சிறப்பு விருந்தினரான டாக்டர் சுதா சேஷய்யன், எம்.எஸ்.,பி.ஜி.டி.பி., தமிழ்நாடு டாக்டர்.எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் இவ்விழாவில், பி.எஸ்.ஜி அறக்கட்டளை மற்றும் செவிலிய கல்லூரியின் வரலாற்றை சித்தரிக்கும் காணொளியை ஒளிபரப்பினர்.
விருதினை பெற்ற முன்னாள் மாணவர்கள் தங்கள் நுண்ணறிவு மற்றும் அனுபவத்தை பி.எஸ்.ஜி செவிலியர் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையில் பகிர்ந்தனர். இவ்விழாவானது மகேஸ்வரி. துணை விரிவுரையாளர் , தலைவர், முன்னாள் மாணவர் சங்கம் அவர்களின் நன்றியுரைடன் இனிதே நிறைவடைந்தது.