• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

26வது ஜேகே டயர் தேசிய சாம்பியன்ஷிப் கார் பந்தயம் எல்ஜிபி பார்முலா 4 சாம்பியனாக ருஹான் ஆல்வா வெற்றி

November 20, 2023 தண்டோரா குழு

கோயம்புத்துார் செட்டிபாளையத்தில் உள்ள கரிமோட்டார்ஸ் ஸ்பீடுவேயில் நடந்த ஜேகே டயர்ஸ் தேசிய சாம்பியன்ஷிப், கார் பந்தயத்தில் எல்ஜிபி பார்முலா 4 பட்டத்தை எம் ஸ்போர்ட்ஸ்சை சேர்ந்த ருஹான் ஆல்வா பெற்றார். ருஹான், கொல்கத்தா டார்க் டான் பந்தய வீரர் ஆர்யா சிங்கை விட 20 புள்ளிகள் பெற்று முன்னணியில் இருந்தார்.

ஆட்ட துவக்கத்தின்போது,பெங்களுரூவை சேர்ந்த பையன்,முன்னணியை பெற்றிருந்தார்.ஆனால், அது, இன்டியன் மோட்டார்ஸ் ஸ்போர்ட்ஸ் மன்றத்தில் மேல்முறையீடு செய்ததால் அந்த இடத்துக்கு ஆர்யா முன்னேறினார்.ஜேகே டயர் நேவிஸ் கப்பை பெற முன்னேறினார். போட்டிகள் முடிந்த பின்னர், தொழில்நுட்ப காரணங்களால், அவரது புள்ளிகள் எண்ணிக்கையிலிருந்து நிறுத்தப்பட்டன. எனவே, பிரிமீயர் பிரிவில் ருஹான் தேசிய சாம்பியன்ஷிப் பட்டத்திற்கு முன்னேற வேண்டிய நிலை வந்தது. போடியம் இரண்டாவது இடத்திலிருந்து ருஹான் பி8 ல் போராடி, 82 புள்ளிகளை பெற்று வெற்றி பெற்றார்.

மிக்க மகிழ்ச்சியுடன் ருஹான் பேசுகையில், “இந்த பட்டத்தை வென்றதில் பெருமையடைகிறேன்.இது பரவசப்படுத்தும் இறுதி போட்டியாக அமைந்துது. டார்க்டன் டிலிஜித் உடன் மிகுந்த நெருக்கடியான போராட்டம் அமைந்தது. சில திருப்பங்களில் இரண்டாவது இடத்தை பிடிக்க யுக்திகளை கையாள வேண்டியிருந்தது. ஆரம்பத்தில் சிறு பதற்றம் இருந்தாலும், தற்போது அதிலிருந்து விடுபட்டு விட்டேன் ” என்றார்.

ஆர்யா மற்றும் அவரது அணியை சேர்ந்த டிஜில் ராவ், 71 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்துக்கு முன்னேற முயற்சித்தனர். ஆர்ஜூன் எஸ் நாயர், 82 புள்ளிகளுடன் ஜேகேடயர் நோவிஸ் கப் எளிதாக பெற்று அவரது அணியை மகிழ்ச்சிப்படுத்தினார். அவரது அணியை சேர்ந்த மெக்பெர்ஷன் 53 புள்ளிகளையும், டிடிஎஸ் ரேசிங் ஜோயல் ஜோசப் 44 புள்ளிகளையும் பெற்று அடுத்த இரண்டு இடங்களை பிடித்தனர். ஜேகே டயர் என்பீல்டு கான்டினென்டல் ஜிடி கோப்பைக்கான போட்டியில், பெங்களுரூ பாய்ஸ், அபிஷேக் யாதவ் வாசுதேவ் 54 புள்ளிகளுடனும், ஜெகதீஷ் நகரா 45 புள்ளிகளுடனும் மற்றும் உல்லாஸ் எஸ் நந்தா 39 புள்ளிகளுடனும் போட்டியை முடித்தனர்.

ஜேகே டயர் 250 கோப்பையை, ஹூப்ளியை சேர்ந்த சர்வேஷ் பலப்பா 30 புள்ளிகளுடன் வென்றார். ஒசுரை சேர்ந்த சச்சின் ஜோதீஷ் இரண்டாம் இடத்தையும், திருப்பூரை சேர்ந்த கோவிந்தராஜ் 3வது இடத்தையும் வென்றனர்.

இரண்டாவது நாள் முடிவுகள்:

எல்ஜிபி பார்முலா 4:1. ருஹான் ஆல்வா (எம்ஸ்போர்ட்) 28:22.808, 2. டிஜில் ராவ் (டார்க் டான் ரேசிங்) 28:19.852, 3. மிரா எர்டா (எம்ஸ்போர்ட்) 28:25.478.
ஜேகே டயர் நோவிஸ் கப்: ஆர்ஜூன் எஸ் நாயர் ( முமண்டம் மோட்டார்ஸ் ஸ்போர்ட்) 10:07.713, 2. நெய்தன் மெக்பெர்ஷன் (முமன்டம் ஸ்போர்ட்ஸ்)10:07.754, 3. ஜிகர்முனி 10:10.095

ஜேகே டயர் ஆர்இ காண்டிநென்டல் ஜிடி கப்: 1. அவிநாஷ் ஷெட்டி (பெங்களுரூ) 13:17.302, 2. அபிஷேக் வாசுதேவ் 13:18.817, 3. சம்ரூல் ஜூபையர் 13:19.706.
ஜேகேடயர் 250 கப் (10 லேப்ஸ்) 1. சர்வேஷ் பலப்பா (ஹூப்ளி) 15:49.274, 2. சச்சின் ஜோதீஷ் (ஒசுர்) 15:53.109, 3. எஸ்.கோவிந்தராஜ் (திருப்பூர்) 15:53.250.

மேலும் படிக்க