• Download mobile app
27 Nov 2024, WednesdayEdition - 3213
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டவுன்டவுன் சார்பில் “ரோட்டோ ரைட் ஆர் ரன் 2023”

November 26, 2023 தண்டோரா குழு

ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டவுன்டவுன் மற்றும் சேக்புரோ சார்பில் “ரோட்டோ ரைட் ஆர் ரன் 2023”; நிகழ்ச்சியானது நாம் நடந்து மற்றவர்களையும் நடக்கவைப்போம் என்ற கருப்பொருளில் இன்று நடைபெற்றது.

8 – 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு செயற்கை கால் வழங்க நிதி திரட்டும் வகையில் “ரோடோ ரைட் ஆர் ரன்” என்ற பெயரில் நடை, ஓட்டம் மற்றும் சைக்கிளிங் நிகழ்வு இன்று காலை 6.00 மணியளவில் கோவை அவினாசி சாலையில் உள்ள ஸ்ரீ ஆர். கே. சண்முகம் செட்டியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.இந்த நிகழ்வை கோவை மாநகர காவல் துறை ஆனையாளர் வி. பாலகிருஷ்ணன் தலைமை வகித்து துவக்கிவைத்தார்.

ரோட்டரி மாவட்டம் 3201 அமைப்பின் 2025 – 2026 ஆண்டு புதிய ஆளுனராக பதவியேற்க உள்ள ரோட்டேரியன் செல்லா கே. ராகவேந்தர் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்வில் பல்வேறு ஓட்டச் சங்கங்களும் மற்றும் கோவை காவல் பயிற்சி பளிளியை சேர்ந்த 200 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வு குறித்து “ரோடோ ரைட் ஆர் ரன்” திட்டத்தலைவர் ரோட்டேரியன் லட்சுமி நாராயணன் கூறுகையில் :-

இந்த “ரோடோ ரைட் ஆர் ரன்” நிகழ்வு மூலம் கிடைக்கும் தொகையானது கோவை மற்றும் அதன் அருகே உள்ள மாவட்டங்களை சேர்ந்த 8 – 14 வயதுக்கு உட்பட்ட செயற்கை கால் பொருத்த வேண்டிய நிலையில் உள்ள ஏழை குழந்தைகளுக்கு நிதி திரட்டும் நிகழ்வாக நடைபெறுகின்றது. கால்கள் வளைந்து, டி.என்.ஏ. குறைபாடு உள்ள குழந்தைகள், நிற்க, நடக்க முடியாத குழந்தைகளுக்கு இந்த செயற்கை கால்கள் வழங்கப்படும்.

இந்த நிகழ்வில் பெறப்படும் நிதியானது ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 – ம் தேதி உலக ஊனமுற்றோர் தினத்தில் செயற்கை கால்கள் வழங்கப்படும். ஒரு சில பயனாளிகளுக்கு ஒரு முறை மட்டுமல்லாது அவர்களின் உடல் வளர்ச்சி ஏற்ப தொடர்ந்து அவர்களுக்கு செயற்கை கால்கள் தேவைப்படும். இவர்களின் தேவைக்கு ஏற்ப ரோட்டரி கிளப் மிட்டவுன் தனது சொந்த பட்டறையில் பயனாளிகளுக்கு அளவு எடுத்து செயற்கை கால்கள் செய்து தரப்படுகின்றன.

இந்த திட்டத்தின் மூலம் இது வரை 300 பேர் பயன் அடைந்துள்ளனர். இந்த ஆண்டு இதுவரை 70 குழந்தைகளும் 30 ஊனமுற்ற நபர்களும் எங்களை அனுகியுள்ளனர். ஆண்டுக்கு ஆண்டு செயற்கை கால்களின் தேவை கூடிக்கொண்டு செல்கின்றது. ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டவுன்டவுன் சார்பில் வழங்கப்படும் செயற்கை கால்கள் ஆண்டு தோறும் குழந்தைகளின் வளர்ச்சிக்கு ஏற்ப அவர்களுக்கு மாற்றி வழங்கப்படும். இதற்கு எங்களுக்கு உறுதுணையாக ஐசிஐசிஐ வங்கி, ஸ்ரீ ஆர். கே. சுண்முகம் செட்டியார் பள்ளி, ஸ்டெக்காய் நிறுவனம் மூலம் இத்திட்டங்களை மேம்படுத்தி வருகின்றோம். மேலும் எங்களுக்கு கோகானெக்டார் தெனீரா பானம் மற்றும் விஜிஎம் மருத்துவமனை ஆகியோரும் கைகொடுத்து வருகின்றார்கள்.

கடந்த 2021 – ம் ஆண்டு முதன் முறையாக “ரோடோ ரைட் ஆர் ரன்” போட்டி நடைபெற்றது. இந்த ஆண்டு மூன்றாவது முறையாக இந்த போட்டி நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்கும் அனைவரும் பதிவு கட்டணம் ரூபாய் 499.00 செலுத்த வேண்டும். இந்த பதிவு கட்டணம் மூலம் வசூலாகும் தொகையில் செயற்கை கால்கள் தயார்செய்து தேவைப்படுவோருக்கு வழங்கப்படும். இந்த போட்டியில் இதுவரை சுமார் 800 – நபர்கள் கலந்து கொண்டு தங்களது பெயர்களை பதிவு செய்து உள்ளார்கள்.

மேலும் காவல் துறை பயிற்சி பள்ளி தலைவர் செட்ரிக் அவர்கள் தலைமையில் 200 காவலர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொள்கின்றார்கள். இந்த போட்டியானது மூன்று பிரிவுகளாக நடைபெற்றது. முதல் பிரிவு 5 – 10 கி.மீ. நடைபயிற்சி, இரண்டாவது 5 – 10 கி.மீ. ஒட்டம் மற்றும் மூன்றாவது பிரிவு 15 – 25 கி. மீ. சைக்கிள் பந்தயம் என மூன்று பிரிவுகளாக நடைபெற்றது.

கோவையில் உள்ளவர்களை ஒருங்கிணைத்து இந்த போட்டி கோவையில் நடைபெறுகின்றது. இதே போல் இந்த போட்டியானது மேலும் சில நாடுகளில் நடைபெறுகின்றது. அவர்கள் “ஸ்ட்ராவா” மற்றும் உடற்பயிற்சி சம்மந்தப்பட்ட செயலிகள் மூலம் தங்களது சைக்கிள், ஓட்டம் மற்றும் நடை போட்டியை பதிவு செய்து எங்களுக்கு அனுப்ப வேண்டும். அவர்கள் அனுப்பும் பதிவை எங்கள் குழுவினர் பரிசோதித்து வெற்றியாளர்களை தேர்ந்தெடுப்பர். இவர்களுக்கு மின்னணுசான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

கோவையில் நடைபெறும் போட்டியில் பங்குபெற்றவர்களுக்கு சான்றிதழ், மெடல்கள், டி-சர்ட், சாக்ஸ் கோகானெக்டார் தெனீரா பானம் மற்றும் பதக்கம் வழங்கப்படும். மேலும் ஸ்ரீ ஆர். கே. சுண்முகம் செட்டியார் பள்ளியின் ஒரு வகுப்பில் உள்ள மாணவ மாணவியர்களுக்கு நேற்று (25.11.2023) ஸ்போர்ட்ஸ் சாக்ஸ் மற்றும் டி-சர்ட் இலவசமாக வழங்கப்பட்டது. இவ்வாறு கூறினார்.

இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகளை ரோட்டரி மாவட்டத்தின் நிர்வாகிகள், மாவட்ட இயக்குனர் ரோட்டேரியன் எஸ். கோகுல்ராஜ், துணை ஆளுனர் ரோட்டேரியன் பி. இளங்கோ, டவன்டவுன் தலைவர் ரோட்டேரியன் மோகன்ராஜ், செயலளார் ரோட்டேரியன் குஹன், பொருளாளர் ரோட்டேரியன் விக்னேஷ். ரோட்டேரியன் கேப்டன் பாலாஜி, முன்னாள் ஆளுனர்கள், தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் செய்து இருந்தனர்.

மேலும் படிக்க