• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

எல்.ஐ.சியின் “ஜீவன் உத்சவ்” புதிய திட்டம் அறிமுகம் !

November 29, 2023 தண்டோரா குழு

எல்ஐசி ஆப் இந்தியா இன்று “ஜீவன் உத்சவ்” என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

90 நாள் குழந்தை முதல் 65 வயது உள்ள அனைவருக்கும் ஏற்ற திட்டமாகும்.பிரீமியம் செலுத்தும் காலம் 5 ஆண்டுகள் முதல் 16 ஆண்டுகள் வரை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

பிரீமியம் செலுத்தும் காலம் முடிந்து, இரண்டு ஆண்டுகள் முதல் ஐந்து ஆண்டுகள் காத்திருப்பு காலத்திற்கு பின், ஆண்டுதோறும் காப்பீட்டுத் தொகையின் 10 சதவீத தொகையை உத்திரவாதமாக பெறக்கூடிய வாய்ப்பு (அல்லது)
பாலிசிதாரரின் விருப்பப்படி, அத்தொகையை 5.5% கூட்டு வட்டியோடு அவர் விரும்பிய காலகட்டங்களில், எப்போது வேண்டுமானாலும், அதிகபட்சமாக 75% வரை எடுத்துக் கொள்ளும் வசதி இத்திட்டத்தின் சிறப்பு அம்சமாகும்.

இது மட்டுமின்றி ஆயுள் காலம் முழுவதற்கும் இன்சூரன்ஸ் காப்பீடு மற்றும் விபத்து காப்பீடும் உள்ளது.எனவே இத்திட்டம் பென்ஷன், இன்சூரன்ஸ் பாதுகாப்பு, குழந்தைகளின் கல்வி, திருமணம் மற்றும் பேரக்குழந்தைகளுக்கு பரிசாக தாத்தா, பாட்டியும் கொடுக்க முடியும். இந்தத் திட்டம் இன்று எல்ஐசி யின் தலைவரால் அகில இந்திய அளவில் தொடங்கி வைக்கப்பட்டது.

இத்திட்டம் கோவையில், முதுநிலை கோட்ட மேலாளர்,டி.பி. ராஜேந்திர குமார் தலைமையில்,இந்தியன் வங்கியின் கோவை மண்டல மேலாளர் ஆர்.ஸ்ரீனிவாசன் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.

திட்டம் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே கோவை கோட்டம் வாடிக்கையாளர்களின் ஏகோபித்த ஆதரவுடன், அகில இந்திய அளவில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க