December 17, 2023 தண்டோரா குழு
தமிழ் மாநில தனியார் மின் பணியாளர்கள் மத்திய சங்கம் பதிவு எண் -1129 கோவை, 23 ஆம் ஆண்டு முன்னிட்டு எலக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பிங் மாபெரும் கண்காட்சி திருவிழா கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள எஸ் என் திருமண அருகில் இன்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில், துவக்கமாக சங்கத்தின் மாநில தலைவர் சி.என்.ஏ வாசன் சிவக்குமார் சங்க கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து கண்காட்சி அரங்கினை காவேரி குரூப் ஆப் கம்பெனியின் இணை நிர்வாக இயக்குனர் அரிமா வினோத் சிங் ரத்தோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தமிழ் மாநில தனியார் மின்பணியாளர் மத்திய சங்க பொதுச் செயலாளர் தங்கவேல், சங்க சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் செந்தில்குமார், மாநில பொருளாளர் சரவணகுமார், மாநிலத் துணைத் தலைவர் பழனிச்சாமி, கோவை மாவட்ட ஆலோசகர் மணிமேகலை ஆகியோர் குத்து விளக்கேற்றி நிகழ்ச்சி துவக்கி வைத்தனர்.
தொடர்ந்து கோவை தொழிலாளர் உதவி ஆணையர் பால தண்டாயுதம் மற்றும் தொழிலாளர் நல வாரியம் உதவி கணக்கு அலுவலர் சரவணன் ஆகியோர் கையேடுகளை வெளியிட்டார். அதனை அகிரா கண்ட்ரோல்ஸ் சி இ ஓ ஜெகதீஷ் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சிக்கு கோவை மாவட்ட தலைவர் காளிமுத்து தலைமை தாங்கினார். கோவை மாவட்ட செயலாளர் கலீல் ரகுமான் முன்னிலை வகித்தார். கோவை மாவட்ட பொருளாளர் ரமேஷ் குமார் வரவேற்புரை வழங்கினார்.
எலக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பிங் கண்காட்சியில், 24 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 19 முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று தங்களது பொருட்களை காட்சிப்படுத்தியுள்ளனர். இதனை பொதுமக்கள் பலர் பார்வையிட்டு சென்றனர்.
நிகழ்ச்சிக்கு, சிறப்பு விருந்தினர்கள் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் சரவணகுமார், மாநில கொள்கை பரப்பு செயலாளர் ஜான் பிரான்சிஸ், மாநில அமைப்பு செயலாளர் முருகவேல், திட்ட குழு தலைவர் நாராயணசாமி, திட்டக்குழு செயலாளர் ஜோதி முருகேசன், மற்றும் விழா ஒருங்கிணைப்பாளர்கள் மாவட்ட அமைப்பாளர் பாரதி, மாவட்ட துணை தலைவர் ஆனந்தராஜ், மாவட்ட துணைச் செயலாளர்கள் ராஜ்குமார், கணேசன், பார்த்திபன் மற்றும் கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் கன்யாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருந்து தமிழ்நாடு மின்பணியாளர்கள சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்ட நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.