• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை புரோஜோன் மாலில்கண்னை கவரும் ஐரோப்பாவின் 50-அடி உயர“ஐபில் டவர்”

December 22, 2023 தண்டோரா குழு

கோவை சத்தியமங்கலம் சாலையில் சரவணம்பட்டியில் அமைந்துள்ளது புரோஜோன் மால்.இங்கு கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு ஐரோப்பாவில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற ஐபில் டவர் 50 அடி உயரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது.மேலும் புரோஜோன் மால் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு காண்பதற்கு ரம்மியமாக உள்ளது.

இதுகுறித்து புரோஜோன் மாலின் இயக்குனர், விஜய் பாடியா, நிதி மற்றும் நிர்வாக தலைவர் பாபு, மார்க்கெட்டிங் தலைவர் பிரிங்ஸ்டன் நாதன், செயலாக்கத் தலைவர் முசாமில் ஆகியோர் கூறியதாவது :-

உலக அதிசயங்களில் ஒன்றான ஐபில் டவர் பாரிஸில் மிகக் கூடுதலாக அடையாளம் காணத்தக்கதாகும்.அத்துடன், உலகம் முழுவதிலும், இது பாரிஸிற்கான ஒரு குறியீடாகவும் அறியப்படுகிறது. இதை வடிவமைத்த அலெக்சாந்தர் கஸ்டவ் ஈப ல்ல்லின் பெயரினால் இது அழைக்கப்படுகின்றது.இக்கோபுரம், முக்கியமான சுற்றுலாத் தலமாகும். ஆண்டுதோறும் 55 இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் இதைப் பார்க்க உலகம் முழுவதிலும் இருந்து வருகிறார்கள்.

நம்மில் பலருக்கு ஐபில் டவரை பார்க்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால் நமது பொருளாதாரம் அதற்கு தடையாக உள்ளது. இவர்களின் ஆசையை சிறிதளவு தீர்த்து வைப்பதற்காக கோவை புரோஜோன் மால் பாரிஸின் ஐபில் டவரை அப்படியே 50 அடி உயரத்திற்கு வடிவமைத்துள்ளது. இந்த ஐபில் டவர் கோபரம் நாளை 22.12.2023 முதல் 10.01.2024 வரை பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்படும். மேலும் பாரிஸில் உள்ளது போல் அலங்காரம் செய்யப்படுள்ளது.இங்கு வாடிக்ககையாளர்கள் புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் லாலிபாப் சுவர், கூழாங்கல் ஓவியம், கிறிஸ்துமஸ் பொக்கிஷம் மற்றும் பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும் புரோஜேன் மாலில் கிருஸ்துமஸ் மேஜிக் என்ற சலுகை விற்பனையும் நடைபெறவுள்ளது. வரும் 31.12.2023 வரை ரூபாய் 4,999.00-க்கு பொருட்கள் வாங்கினால் மாபெரும் பரிசு வெல்ல வாய்ப்பு உள்ளது. மேலும் முன்னணி தயாரிப்புகளுக்கு 60 சதவீதம் வரை தள்ளுபடியும் உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் படிக்க