• Download mobile app
25 Nov 2024, MondayEdition - 3211
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மதுரையில் 3-வது நாளாக ரயில் மறியல் போராட்டம்

January 21, 2017 தண்டோரா குழு

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மதுரையில் தொடர்ந்து 3-வது நாளாக ரயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.

மதுரை மாவட்டம் வைகை ஆற்றின் மேல் உள்ள பாலத்தில் பொதுமக்களுடன் இணைந்து மாணவர்கள் ரயில் மறியல் போராட்டத்தை வியாழக்கிழமை தொடங்கினர்கள். தொடர்ந்து 3-வது நாளாக அங்கு நடைபெறும் இப்போராட்டத்தில் பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் என அனைத்து பொதுமக்களும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோருக்கு வைகை ஆற்றின் பாலம் அருகில் உள்ள செல்லூர் கிராம மக்களே உணவு , தண்ணீர் போன்றவற்றை வழங்கி வருகின்றனர்.

இப்போராட்டத்தில் கலந்துகொள்ள பொதுமக்கள், வணிகர்கள் என அனைவரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், மதுரையில் ரயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ரயில் சேவை இல்லாத காரணத்தால் பொதுமக்களுக்குப் பயணம் செய்வதில் இடையூறு ஏற்பட்டாலும் ஜல்லிக்கட்டுக்காக அதைப் பொறுத்துக் கொள்வதாக மக்கள் கூறுகின்றனர்.

ரயில் மறியல் போராட்டம் தமிழக வரலாற்றிலேயே முதன் முதலாக மூன்று நாட்கள் நடைபெறுவது இதுதான். நடுவழியிலேயே மூன்று நாட்களாக ஒரு ரயிலை மாணவர்கள் சிறைப்பிடித்து வைத்திருப்பது அனைவரையும் வியப்படையச் செய்துள்ளது.

ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் பேருந்துகளில் பயணம் செய்து வருகின்றனர். இப்போராட்டத்தால் எந்த வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க