• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர் சங்கத்தின் 28வது ஆண்டு விழா

January 7, 2024 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நல சங்கத்தின் 28வது ஆண்டு விழா பீளமேடு கொடிசியா அரங்கத்தில் நடந்தது.இதில் சங்க தலைவர் உதயகுமார், செயலாளர் கேசிபி சந்திரபிரகாஷ்,பொருளாளர் அம்மாசையப்பன்,துணை தலைவர் ராஜ கோபால், துணை செயலாளர் மைக்கேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.இதில் சினிமா நடிகர் சதீஷ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.

சங்கத்தின் சார்பில் ஒரு ஆண்டிற்குள் 2 கோடி ரூபாய் செலவில் திருமண மண்டபம் கட்டி பொதுமக்கள்,ஏழை மக்களுக்கு குறைந்த வாடகைக்கு விடப்படும். ஒப்பந்ததாரர்கள் பதிவு ஒரு ஆண்டிற்கு ஒரு முறை புதுப்பித்து வழங்கப்படுகிறது. இந்த நிலையில் அதனை 3 ஆண்டிற்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும். பொதுப்பணித்துறையில் உள்ள நடைமுறையை கடைபிடிக்க வேண்டும் என கடந்த 2 ஆண்டாக கோரிக்கை விடப்பட்டது. இந்த ஆண்டு முதல் பதிவு பணியை 3 ஆண்டுக்கு ஒரு முறை மாநகராட்சியில் புதுப்பித்து பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் உள்ள பூங்காக்களில் மாநகராட்சி கமிஷனர் அனுமதி பெற்று சுமார் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படும்.மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்காக இலவசமாக கண், பல் பரிசோதனை, சிகிச்சை முகாம் நடத்த அனுமதி பெறப்பட்டது. சுமார் 90 மாநகராட்சி பள்ளிகளில் இந்த ஆண்டு கண், பல் சிகிச்சை முகாம் நடத்தப்படும். சங்க உறுப்பினர்களுக்கு 10 லட்ச ரூபாய் மதிப்பிலான விபத்து காப்பீடு வழங்கப்பட்டது. இந்த ஆண்டு முதல் மருத்துவ காப்பீடு 25 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.

வரும் காலங்களில் அனைவருக்கும் டெண்டர் என்ற நடைமுறை பின்பற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது, அதாவது அனைத்து ஒப்பந்ததாரர்களுக்கும் சமமான முறையில் வேலை கிடைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். சங்க உறுப்பினர்கள் அனைத்து அரசு துறைகளிலும் மொத்தமாக 1500 கோடி ரூபாய் வரை பணிகள் நடத்தி வருகிறார்கள்.

வரும் 3 ஆண்டுகளில் 2500 கோடி ரூபாய்க்கு பணிகள் அதிகரிக்க தேவையான ஆலோசனைகள் மற்றும் உதவிகள் சங்கத்தின் சார்பில் செய்து தரப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதில் பாட்டு, நடனம், கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

மேலும் படிக்க