January 29, 2024 மு,சிராஜ்தீன் (WNCT)
கோவையில் நாட்டு வெடி தயாரிப்பு மற்றும் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனால் அதிகம் பாதிக்கக்கூடியவை வன விலங்குகள் தான் இதில் குறிப்பாக யானைகள் அதிகம் பாதிக்கப்படுகிறது, ஒரு யானைக்கு பல்வேறு விதைகள், இலைதலைகள், கலந்த ” 300 KG ” கிலோ வரை தீவனமும், பெரு மளவு தண்ணீரும் தேவைப்படுகிறது
மேலும் அந்த உணவு செறிமானம் பெற யானைகள் குறைந்தது ” 60 KM ” கிலோ மீட்டர் தூரம் வரை நடந்தாக வேண்டும். நாட்டு வெடியால் வாய் சிதறி பாதிப்புக்குள்ளாகும் யானைகள் எந்த ஒரு உணவும் உட் கொள்ளாமல் பசியால் துடி துடித்து இறக்குகிறது.
“காடு அழிந்தால் நாடு அழியும்”
என்பன காட்டின் சிறப்பை உணர்த்தும் பழமொழிகள் ஆகும்.ஒரு யானை இருந்தால் ஒரு வனத்தையும் உருவாக்கலாம் என கூறுவார்கள்.அதற்கு காரணம் யானையின் சாணமும்,அவற்றின் அறிவுத்திறமையும் தான்.
நாடு முழுவதும் வனங்களில் உள்ள யானைகள் உணவு, தண்ணீர் தேடி தனக்கு சாதகமான இடத்திற்கு கூட்டம் கூட்டமாக இடம்பெயரும் தன்மை கொண்டவை. இதனை யானைகள் வலசு போதல் என்று சொல்வார்கள்.
தென் மேற்குப் பருவமழை, வட கிழக்குப் பருவமழைக் காலங்களில் இந்த இடப்பெயர்ச்சி இருக்கும். இன்றைய நிலையில் காடுகளின் காவலனாக இருக்கும் யானைகள் பல விதமான அச்சுறுத்தல்களை சந்தித்து வருகின்றன.முக்கியமாக, யானைகளின் வழித்தடங்கள் அழிக்கப்படுகின்றன. காடுகளுக்கு இணைப்புப் பாலமாக உள்ள இந்த வலசைப் பாதையை இழக்கும் யானைகள், உணவு, தண்ணீருக்காக தவிப்பது மட்டுமின்றி,
வேறு கூட்டத்துடன் இணை சேருதலும் பாதிக்கப்பட்டு, பன்முக மரபணு மாற்றம் தடுக்கப்பட்டு, ஆரோக்கியமான யானைக் கூட்டம் உருவாவதும் தடைபடுகிறது.
எதிர்கால சந்ததிகளுக்கு உயிர்ச் சூழலை பத்திரமாக விட்டுச் செல்ல வேண்டுமெனில், யானைகளைப்பாதுகாப்பது மிகவும் அவசியம். தனி மனித முயற்சி பல்லுயிர் பெருக்க பாதுகாப்பில் ஒரு பெரும் மாற்றத்தை ஏர்படுத்தும் என்பதை மக்கள் உணர்வதில்லை.
கடந்த 27/01/2024 அன்று கோவை கரடிமடை பகுதியில் சட்டவிரோதமாக (அவுட்டுக்காய்) என்னும் நாட்டு வெடி தயாரிக்கும்போது வெடித்ததில், கரடிமடை, வன்னியர் வீதியை சேர்ந்தவர் ரங்கன் என்கிற ரங்கசாமி மற்றும் மாறன் என்பவருடன் சேர்ந்து, வனவிலங்குகளை வேட்டையாட வீட்டின் அருகே உள்ள ஆட்டு கொட்டகையில் அவுட்டுக் காய் எனப்படும் நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது எதிர்பாராத விதமாக, அவுட்டுக் காய் வெடித்ததில்,ரங்கசாமியின் இடது கை விரல்கள் துண்டானது. இதனையடுத்து, மாறன், ரங்கசாமியை கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
2021 ஆம் ஆண்டு நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் காட்டுப்பன்றி இறைச்சியை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் ரங்கசாமியை வனத்துறையினர் கைது செய்தனர். 2022 ஆம் ஆண்டில், ரங்கசாமியின் வீட்டில் இருந்து 4 வெடிகுண்டுகளை தணிக்கையில் திடீர் சோதனையின் போது கைப்பற்றி அவர் தலைமறைவாக இருந்தார்.கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அவரை போலீசார் கைது செய்தனர்.இருப்பினும், இரண்டு வாரங்களுக்கு முன்பு நிபந்தனை ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்த பிறகும் இவர் தொடர்ந்து வெடி மருந்து தயாரித்து வந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
ஆகையால் இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட வன அலுவலர் அவர்கள் கோவை மாவட்ட ஆட்சியருக்கு அவர்களுக்கு பரிந்துரை செய்ய வேண்டுகிறேன்.