February 1, 2024 தண்டோரா குழு
அரசம்பாளையத்தில் உள்ள அமிர்தா வேளாண் கல்லூரியில் பயிலும் இறுதியாண்டு மாணவ,மாணவியர் ஊரக வேளாண் செயல்முறை பயிற்சி அனுபவத் திட்டம்- கிராமப்புற தங்குதல் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான நவீன யுக்தி செயல்முறை விளக்க முகாமை நடத்தினர்.
இந்த நிகழ்வில் நவ்யா,கீர்த்தனா,சாய் ஷ்ரேயா,சாய் ஷோபனா,காவியா, பிருத்விராஜ்,சிவானி,நிதின்,தேவிகா, ஐஸ்வர்யா,ஆதித்யன் குருப்,ஆர்த்ரா, கோபிகா,சோனிஷ் ஆகிய மாணவ, மாணவியர் பங்கு வகித்தனர்.
இந்த முகாம்,கிராம வேளாண்மை முன்னேற்ற குழுத்தலைவர் சுப்பிரமணியம் முன்னிலையில் நடைபெற்றது. மண் மாதிரி சேகரிப்பு குறித்த செயல் விளக்கம் , ஒற்றை வேர்த்தண்டுக்கிழங்கு தொழில்நுட்பம்,சிறுதானியங்கள் சாகுபடியை நோக்கி மாறுவது குறித்த விழிப்புணர்வு மற்றும் வாழையில் நூற் புழு மற்றும் நோய் மேலாண்மை குறித்த விளக்கங்களை கொடுத்தனர்.
இந்த செயல்முறை விளக்கங்களின் இன்றைய தேவையும் முக்கியத்துவமும் தெளிவாக கூறப்பட்டது.வடசித்தூரின் விவசாய சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறும் , பிரச்சனைகளுக்கு தீர்வாகவும் இந்த நிகழ்ச்சி அமைந்தது.வடசித்தூரைச் சேர்ந்த விவசாயிகள் இந்த செயல்முறை விளக்கத்தில் கலந்து கொண்டனர்.கல்லூரி முதல்வர் முனைவர் சுதீஷ் மணலில் அவர்களின் தலைமையிலும்,குழு வழிகாட்டுனர்கள் முனைவர்.ர.பிரியா , முனைவர் சீ.பார்த்தசாரதி , முனைவர். வீர.மகேசன் ஆகியோரின் வழிகாட்டுதலுடன் இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.