• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பாரம்பரிய பூச்சிக்கொல்லி தயாரிக்கும் முறைமற்றும் சிறுதானிய சாகுபடிக்கு மாறுவது குறித்து அமிர்தா வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு !

February 5, 2024 தண்டோரா குழு

கிணத்துக்கடவு,அரசம்பாளையத்தில் உள்ள அமிர்தா வேளாண்மை கல்லூரியில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவர்கள் தங்கள் ஊரக வேளாண்மை செயல்முறை பயிற்சி அனுபவத் திட்டத்தின் (RAWE) கீழ் குருநல்லிபாளையத்தில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்தின் அருகில் விழிப்புணர்வு செயல்முறை விளக்கங்களை அளித்தனர்.

இந்த நிகழ்வில் பார்வதி எஸ்,ஐஃபா அம்ரின்,தேவநந்தனா பினுராஜ்,கிருஷ்ணா, நட்சத்திரா,ஜெயஸ்ரீ,வரதா அருண்,அபிஜித் ராபி,ஆதிரா ராஜன்,ஆயிஷா ஷபானா, ஸ்ரீகாந்த்,நேஹா மாதவன்,அக்ஷத் கே அணில்,தீட்சண்யா பி,சோனா சரஸ்வதி ஆகிய மாணவ மாணவிகள் பங்கு வகித்தனர்.அதன் பகுதியாக சிறுதானியங்கள் சாகுபடி செய்வதால் வரும் பயன்களையும் அதன் முக்கியத்துவத்தையம் கூறி அனைவரையும் சிறுதானியங்கள் சாகுபடியை பின்பற்றுமாறு விழிப்புணர்வு அளித்தனர்.

அதன்பின் விவசாயிகளின் நிலத்தில் மண் பரிசோதனை செய்து மண் ஆரோக்கிய அட்டை பற்றி விரிவாக விளக்கம் அளித்தனர்.பிறகு பயிர்களில் வரும் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நச்சுத்தன்மையின் வேறுபாடுகளை விவசாயிகள் எளிதாக கண்டறிய யோசனைகளை அளித்தனர்.மேலும், பாரம்பரிய பூச்சிக்கொல்லி என்று அழைக்கப்படும் 3 ஜி கரைசலை தயாரிக்கும் முறையை கூறி ரசாயன மருந்துக்கு பதிலாக இயற்கை முறையில் செடிகளில் தெளிப்பது மூலம் பயனடையலாம் என்று செயல்முறை மூலம் விளக்கினர்.

இறுதியாக,மஞ்சள் சாகுபடிக்கு ஒற்றை வேர்த்தண்டுக்கிழங்கு தொழில்நுட்பத்தை பற்றி விவசாயிகளுக்கு செயல்முறை மூலம் விளக்கினர்.இந்நிகழ்ச்சியில்,விவசாயிகள் பங்கேற்று அவர்களின் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.கல்லூரி முதல்வர் சுதீஷ் மணலில்,பேராசிரியர்கள் சுரேஷ்குமார்,முருகஸ்ரீதேவி, காமேஷ் கிருஷ்ணமூர்த்தி வழிக்காட்டுதலின் கீழ் இந்நிகழ்வு நடைபெற்றது.

மேலும் படிக்க