• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சாக்லேட் கபாலிக்கு குவியும் ரசிகர்கள் பாராட்டு.

April 5, 2016 வெங்கி சதீஷ்

ரஜினி என்ற வார்த்தை தென்னிந்திய திரையுலகில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராகத் திகழ்ந்து வருகிறார்.

தமிழ் மட்டுமன்றி தென்னிந்திய மொழிகள், வட மாநிலம் மற்றும் வெளிநாட்டு ரசிகர்களையும் கொண்ட ரஜினியை மையப்படுத்தி எந்த ஒரு செயலை செய்தாலும் அதனுடன் சேர்ந்து நாமும் பெயர் வாங்கலாம் என்பது உறுதி.

இதனால் ரஜினி குறித்து எந்த ஒரு நிகழ்வுமே பரபரப்பாக பேசப்படும். தற்போது ரஜினியின் புதிய படமான கபாலி வேகமாக வளர்ந்து வரும் நிலையில் அதில் வரும் ரஜினியின் கெட்டப் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்திழுக்கிறது.

இதையொட்டி அவரது அந்தத் தோற்றம் குறித்து பல்வேறு வதந்திகள் பரவின. மேலும் அந்தத் தோற்றத்தால் கவர்ந்த புதுச்சேரி சுகா பேக்கரி நிறுவனம் சுமார் 600 கிலோ எடை கொண்ட ரஜினியின் கபாலி கெட்டப் சிலையைச் செய்துள்ளது.

இது அங்குள்ள ரசிகர்கள் மற்றும் பொதுமக்களைக் கவர்வதோடு, தமிழக ரசிகர்களையும் கவர்ந்திழுக்கிறது. அந்த சாக்லேட் கபாலியாயைக் காணவே தமிழகத்தில் இருந்து பல ரசிகர்கள் புதுச்சேரி சென்று வருகின்றனர் எனக் கூறப்படுகிறது.

இந்தக் கபாலி கெட்டப் சாக்லேட் மூலம் அந்த பேக்கரி தற்போது மிகப்பெரிய பெயர் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க