February 10, 2024 தண்டோரா குழு
கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள வெங்கடலட்சுமி திருமண மண்டபத்தில் பிப்ரவரி 10ம் தேதி சனிக்கிழமை இன்று காலை முதல் ட்ரை மேக்ஸ் ஈவன்ட் நடத்தும் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்கான ஷாப்பிங் எக்ஸ்போ மிகப் பிரமாண்டமாக துவங்கப்பட்டுள்ளது. இந்த எக்ஸ்போ பிப்ரவரி 10ஆம் தேதி 11-ம் தேதி மற்றும் 12ம் தேதி ஆகிய மூன்று நாட்கள் நடைபெறுகிறது.
இதில் சிறப்பு விருந்தினராக கோவை மாநகர மாவட்ட செயலாளர் நா.கார்த்திக், கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் கலந்து கொண்டனர்.60வது மாமன்ற உறுப்பினர் சிவா, 60வது வார்டு வட்டச் செயலாளர் முருகானந்தம், ட்ரைமேக்ஸ் ஈவென்ட் உரிமையாளர் இம்ரான் மற்றும் பலர் கலந்து கொண்டு கண்காட்சியை துவக்கி வைத்தனர்.
இது குறித்து,ட்ரை மேக்ஸ் ஈவென்ட் இம்ரான் கூறுகையில்,
தமிழ்நாட்டில் 12 வருடமாக ட்ரை மேக்ஸ் ஈவென்ட் நடத்தி வருகிறோம். இதில் கோவையில் 20வது முறையாக இந்த எக்ஸ்போ நடைபெறுகிறது. கோவையில் முதல் முறையாக இந்த ஆண்டு ஜங்கிள் புக் மோகலியின் பாரஸ்ட் அமைப்பில் டிஜிட்டல் ஒலியுடன் மாதிரி விலங்குகளை அமைத்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் 100க்கும் மேற்பட்ட அரங்குகளில் பொதுமக்கள் குடும்பத்துடன் ஷாப்பிங் செய்வதற்காக எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், பர்னிச்சர்ஸ், வீட்டு உபயோக பொருட்கள், குழந்தைகளுக்கான புத்தகங்கள் மற்றும் பள்ளி உபகரண பொருட்கள், பெண்களுக்கான பேன்சி பொருட்கள் என குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பிரியாணி உணவு திருவிழா, சைவம் மற்றும் அசைவம் உணவுகள் மற்றும் நூறுக்கும் மேற்பட்ட வெரைட்டி உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகளுக்கான 40-க்கும் மேற்பட்ட விளையாட்டுக்கள், இலவச மீன்கள் மற்றும் ஒட்டகப் பயணம், வாட்டர் கேம்ஸ், மேஜிக் ஷோ, ஸ்னோ வேர்ல்டு, 7டி ஷோ, பேய் வீடு போன்ற பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் இடம் பெற்றுள்ளன.
குறிப்பாக ரூபாய் 700 மதிப்புள்ள விஐபி பாஸ் டிக்கெட்டில் ப்ரீ கேம்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சி காலை 10:30 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. என தெரிவித்தார்.