February 19, 2024 தண்டோரா குழு
கோவை மாவட்டம் செல்வபுரம் பகுதியில் வசிக்கும் தீபன் மற்றும் மதுபதி தம்பதியினர் மகள் ஷிவானி.1 வயது 10 மாதங்கள் ஆன இவர் தனது அதீத திறமையால் சாதனை புரிந்துள்ளார்.
இந்த சிறிய வயதிலேயே பதினோரு தேசிய அடையாளங்கள்,எட்டு வண்ணங்கள்,9 வடிவங்கள்,6 வகையான முக பாவனைகள், 4 நர்சரி ரைம்களைப் படிக்கவும்,ஆங்கில சொற்களை படிக்கவும்,1 முதல் 10 எண்களை சொல்லவும், உயிர் எழுத்துகள் மற்றும் ஆத்திச்சூடி சொல்கிறார்.
இவரின் இந்த அதீத திறமையை அடையாளம் கண்டு அங்கீகரித்த இந்தியன் புக் ஆப் ரெக்கார்டுஸ் இவருக்கு சான்றிதழ் வழங்கியுள்ளது.
இது குறித்து அவரது தாய் மதுமதி கூறுகையில்,
இந்தியன் புக் ஆப் ரெக்கார்டுஸ்ல் எனது மகள் ஷிவானியின் பெயர் இடம்பெற்றுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அவள் புத்தகத்தில் ஆர்வமாக இருக்கிறாள் என்பதை அடையாளம் காட்டியது அவளுடைய அத்தை ஷாந்தினி. அமேசானின் ஃபிளாஷ் கார்டுகள் மற்றும் “1000 வார்த்தைகள்” புத்தகம் உண்மையில் உதவியது. நான் தொட்டு உணரும் புத்தகங்களுடன் தொடங்கினேன்.
கற்பிக்க முயற்சிக்காதீர்கள் ஆர்வத்தை உருவாக்க முயற்சி செய்யுங்கள்.அவர்களை உட்கார வைத்து கற்பிக்க முடியாது. அவர்களின் ஓட்டத்துடன் செல்லுங்கள். எனது மகளின் இந்த இன்னமும் முயற்சி செய்து அடுக்க கட்டத்திற்கு கொண்டு செல்வோம் என்றார்.