February 23, 2024 தண்டோரா குழு
கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நல சங்கத்தின் செயலாளர் கேசிபி இன்பரா நிறுவன நிர்வாக இயக்குனர் சந்திர பிரகாஷ் வெளியீட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கோவை மாநகராட்சியில் காண்டிராக்டர்ஸ் சங்கத்தை சேர்ந்த 25 ஒப்பந்ததாரர்கள் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை, குப்பை அகற்றும் பணியில் சிறப்பாக செயல்பட்டு வந்தார்கள்.
இந்த நிலைமையில் 6 மாதம் முன்பு வெளி மாநிலத்தை சேர்ந்த சதர்ன் கம்பெனிக்கு மொத்தமா காண்ட்ராக்ட் கொடுத்துட்டாங்க. 25 காண்ட்ராக்டர் செய்த வேலையை அந்த ஒரு கம்பெனி செய்றாங்க.இப்போ மொத்தமும் பிரைவேட் அப்படிங்கிற நிலைமை உருவாகியிருச்சு. அந்த சதர்ன் கம்பெனி சரியா குப்பை எடுக்கவில்லை என புகார் சொல்கிறார்கள்.ஆனா குப்பை கிடங்குக்கு போற குப்பை வெயிட் மட்டும் அதிகமா இருக்கு..
குப்பை வெய்ட் அதிகமாக்கிறதுக்காக ரோட்டோரம் கிடக்கிற மண் ஜல்லி கல் என எல்லாத்தையும் பொறுக்கி போட்டு அதிக டன் குப்பை எடுத்ததா கணக்கு காட்டுகிறாங்க.கடந்த காலங்களில் எடுத்ததை விட இப்போ 500 டன் அதிகமாக வர மாதிரி சொல்றாங்க.கடந்த காலங்களில் 25 காண்டிராக்டர்கள் குப்பை எடுக்கும் வேலை செய்த போது பெரும்பாலான இடங்களில் குப்பை இல்லாமல் சுத்தமா இருந்துச்சு. ஆனா இப்போ குப்பைகள் பல இடங்களில் அதிகமாக இருக்கிறது. அந்த கம்பெனி ஏன் வேலை செய்யவில்லை என மாநகராட்சியும் கேட்கவில்லை. அந்த கம்பெனியை விட்டா வேற வழி இல்ல அப்படிங்கற மாதிரி அப்படியே விட்டுட்டாங்க.
வெயில் காலமாக இருக்கிறதால பரவாயில்ல. இதே மழை காலமாக இருந்தால் தேங்கி கிடக்கிற குப்பையால வேகமா நோய் பரவியிரும்.மாநகராட்சியில் குப்பை அகற்றும் பணிக்கு அனுபவம் வாய்ந்த காண்ட்ராக்டர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும். மொத்தமாக 5 ஆண்டுகளுக்கு தனியார் கம்பெனிக்கு ஒப்பந்தம் கொடுத்துவிட்டு அவர்கள் சரியாக வேலை செய்யாவிட்டாலும் அப்படியே விடுவது சரியல்ல.குறைந்தபட்சம் 4 ஒப்பந்ததாரர்களுக்காவது பணியை பகிர்ந்து கொடுத்து இருந்தால் ஒருவர் சரியாக செய்யாவிட்டாலும் இன்னொருவர் மூலமாக பணியை செய்ய வைத்திருக்க முடியும்.
மாநகராட்சியில் இருக்கிற காண்ட்ராக்டர்களுக்கு குப்பை அகற்றும் பணி சம்பந்தமாக பயிற்சி கொடுத்திருக்கலாம். ஆனா பொதுவா மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் குப்பை அகற்றும் பணியை சரியா வேலை செய்யல என தகவல் பரவியிருக்கிறது. இது மன வருத்தம் ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் பணி செய்த போது சிறப்பாக இருந்தது.
இவ்வாறு கேசிபி சந்திர பிரகாஷ்
தெரிவித்துள்ளார்.