• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

செயற்கை நுண்ணறிவு துணையுடன் இயங்கும் ரோபோடிக் CORI மூட்டு மாற்று சிகிச்சை முறை அறிமுகம் !

March 2, 2024 தண்டோரா குழு

புதுமையான மற்றும் உலகத்தரமான மருத்துவ தொழில்நுட்பங்களை தொடர்ந்து அறிமுகம் செய்வதில் கேஎம்சிஹெச் மருத்துவமனை முன்னணியில் உள்ளது. இவற்றில் பல இந்தப் பகுதியில் முதன்முறையானவை என்பது குறிப்பிடத்தக்கது.இடுப்பு மற்றும் மூட்டு மாற்று சிகிச்சையில் 1990 முதல் கேஎம்சிஹெச் முன்னணியில் உள்ளது. இந்தியாவில் சுமார் 15 சதவிகித மக்கள் ஆர்த்ரைடிஸ் எனப்படும் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதில் பெரும்பாலும் வயதானவர்கள் முழங்கால் மற்றும் இடுப்பு பகுதியில் கடும் வலியினால் அவதிப்படுகின்றனர்.

ஆண்களை விட பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் அறுபது வயதிற்கு மேற்பட்ட சுமார் 18 சதவிகித பெண்களுக்கும் 9.6 சதவிகித ஆண்களுக்கும் இந்தப் பிரச்சினை உள்ளது. ஆர்த்ரைடிஸ் சிகிச்சைக்கு வலி நிவாரண மாத்திரைகள் , ஊசிகள் , பிசியோதெரபி பயோலாஜிக்ஸ் ஆகிய பலவிதமான ஆரம்ப நிலை சிகிச்சை முறைகள் உள்ளன. எனினும் நோய் தீவிரமடைந்த நிலையில் மூட்டு மாற்ற வேண்டியிருக்கும் இதனால் சிறந்த வலி நிவாரணம் கிடைப்பதோடு வாழ்க்கை தரம் மேம்படும்.

புதுமையான மருத்துவ தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் பாரம்பரியத்தின் அடுத்த கட்டமாக கேஎம்சிஹெச் தற்போது அமெரிக்காவிலிருந்து தருவிக்கப்பட்ட கோரி ரோபோட்டிக் மூட்டு மாற்று கருவியை அறிமுகம் செய்துள்ளது மிகத்துல்லியமான அறுவை சிகிச்சைக்கு இந்த அதிநவீன ரோபோ இயந்திரம் உதவுகிறது.மேலும் மென்மையான திசுக்களைப் பாதுகாத்து நோயாளி விரைவில் குணமடையவும் உதவிகரமாக உள்ளது.

செயற்கை நுண்ணறிவு துணையுடன் இயங்கும் இந்த கருவியானது . அறுவை சிகிச்சையை சுலபமாகவும் விரைவாகவும் செய்துமுடிக்க உதவுகிறது . மேம்பட்ட துல்லியம் , எலும்புகள் மீது மிகவும் கச்சிதமாக இம்பிளாண்டுகள் பொருத்துதல் , நோயாளியின் மூட்டு அமைப்புக்கு ஏற்றவாறு பிரத்யேக சிகிச்சை , அறுவை சிகிச்சைக்குப் பின்னர் குறைவான வலி மற்றும் வீக்கம் ஆகியவை இந்த ரோபோட்டிக் தொழில்நுட்பத்தினால் கிடைக்கும் முக்கிய பலன்களாகும். நோயாளி விரைவில் குணமடைவதால் மருத்துவமனையில் தங்கும் காலம் குறைவாகும்.

இந்த ரோபோட்டிக் கருவியைப் போல் இந்தியாவிலேயே முதன்முறையாக அதிநவீன 3 டி சி ஆர்ம் ( 3D C – Arm ) என்ற இமேஜிங் கருவியையும் கேஎம்சிஹெச் அறிமுகம் செய்துள்ளது.எலும்பு முறிவு அறுவை சிகிச்சைகளின் துல்லியத்தை இது அதிகரித்து சிறந்த பலனைக் கொடுக்கும். எலும்புகள் மறுகட்டமைப்பு முதலான சிக்கலான சிகிச்சைகளையும் மேம்பட்ட திறனுடன் செய்து முடித்திட இது உதவுகிறது.முப்பரிமாண தொழில்நுட்பம் துணையுடன் மருத்துவர் அறுவை சிகிச்சையை மேற்கொள்ள உதவுகிறது.

மேலும் ஸ்குரூக்கள் , இம்பிளாண்டுகள் முதலானவற்றை துல்லியமாகப் பொருத்தி சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற உதவியாய் உள்ளது இதர அறுவை சிகிச்சைத் துறைகளைப் போல எலும்பு மருத்துவ துறையில் நோயாளியின் சௌகரியத்தை மேம்படுத்தும் தொழில்நுட்பம் சிறப்புடன் செயல்படுகிறது.நோயாளிகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் இத்தகைய புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளதின் மூலம் கேஎம்சிஹெச் எலும்பு மருத்துவத் துறையானது ஒரு முன்னோடியாக விளங்குகிறது ” என்று கேஎம்சிஹெச் தலைவர் டாக்டர் நல்லா ஜி.பழனிசாமி குறிப்பிட்டார்.

இந்த அதிநவீன இயந்திரங்கள் அளிக்கும் அனுகூலங்களை நோயாளிகள் எளிதில் பெற்றுப் பலனடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் கேஎம்சிஹெச் ஒரு ரோபோட்டிக் மூட்டு மாற்று முகாமிற்கு ஏற்பாடுகள் செய்துள்ளது.2024 மார்ச் 1 முதல் மே 31 – ம் தேதி வரை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் நடைபெறும் இம்முகாமில் ரோபோட்டிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை 20 % சலுகைக் கட்டணத்தில் அளிக்கப்படுகிறது.

பொதுமக்கள் இந்த நல்வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள அழைக்கவும்:
733 9333 485.

மேலும் படிக்க