January 23, 2017 findmytemple.com
சுவாமி : சண்முகநாதர்.
அம்பாள் : வள்ளி, தெய்வானை.
தீர்த்தம் : தேனாறு.
தலவிருட்சம் : அரசமரம்.
தலச்சிறப்பு :
குன்றக்குடிக்கு காவடி எடுத்தால் நினைத்தது நடக்கும்.“குன்றக்குடிக்கு காவடி எடுத்தாலும் நடக்காது” என்ற பழமொழி தமிழகத்தில் பரவியுள்ளது. இப்பழமொழியால் குன்றக்குடிக்கு காவடி எடுத்தால் நினைத்தவை கை கூடியே தீரும் என்பது எதிர்மறையாக வலியுறுத்தப்படுகிறது.
தல வரலாறு :
ஸ்ரீசண்முகன் மயிலின்மீது அமர்ந்த கோலத்தில் கிழக்கு நோக்கி உள்ளார்.வள்ளியும் தெய்வானையும் இருபுறங்களில் தனித்தனியே மயில்களில் உள்ளனர் .சூரனாதியோர் தேவர்களை பழிவாங்கும் நோக்கில் மயிலிடம் நான்முரனின் அன்னம், திருமாலின் கருடன் ஆகியவை நாங்கள்தான் மயிலை விட வேகமாக பறக்கக் கூடியவர்கள் என்று சொன்னதாக பொய் சொன்னதால் மயில் கோபம் அடைந்தது. அன்னத்தையும், கருடனையும் மயில் விழுங்கி விட்டது.
இந்திரனும் திருமாலும் முருகனிடம் முறையிட அன்னத்தையும், கருடனையும் மீட்டு தந்தார். பின்பு செய்த குற்றத்திற்காக மயிலை மலையாகிப் போக சாபம் தந்தார். மயிலும் தன் தவறை உணர்ந்து அரச வனத்துக்கு (குன்றக்குடி) வந்து முருகப்பெருமானை நோக்கி தவம் இருந்தது. முருகனும் மயிலுக்கு சாப விமோசனம் தந்தார். பின் மயிலின் வேண்டுகோளுக்கிணங்க மயில் வடிவமாக தோற்றத்தில் உள்ள இம்மலையில் எழுந்தருளி அருள் தந்தார் .
வள்ளி தெய்வயானை சமேத ஆறுமுகப்பெருமான் மயில் வாகனத்தில் வீற்றிருக்கின்றார். மருதுபாண்டியருள் மூத்தவரான பெரிய மருதுவுக்கு முதுகில் ஏற்பட்டிருந்த ராஜ பிளவை என்னும் கட்டியை, வைத்தியர்களால் தீர்க்க முடியாது என்று கைவிரித்த போது, இம்முருகப்பெருமான் அருளால் அந்த பிளவை நோய் குணமடைந்தது.அம்மருது சகோதரர்களால் திருப்பணிகள் பல செய்யப்பட்டன. குன்றக்குடி முருகனுக்கு பரிகார பூஜை செய்தால் கோபத்துன்பங்கள் நிவர்த்தியாகும். இங்கு திருமணம் செய்தால் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும். இதனால் இங்கு முகூர்த்த நாட்களில் அதிக அளவில் திருமணங்கள் நடைபெறுகின்றன.
நடைதிறப்பு :
காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
திருவிழாக்கள் : பங்குனி உத்திரம் 10 நாள் திருவிழா தைப்பூசத் திருவிழா 10 நாள் திருவிழா இவை இரண்டும் இத்தலத்தின் மிகப்பெரிய திருவிழாக்கள் ஆகும். சித்திரை – பால்பெருக்கு விழா வைகாசி – வைகாசி விசாகப் பெருவிழா ஆனி – மகாபிசேகம் ஆடி – திருப்படிபூஜை ஆவணி – ஆவணிமூலம்பிட்டுத்திருவிழா புரட்டாசி – அம்புபோடும் திருவிழா ஐப்பசி – கந்த சஷ்டி திருவிழா.
அருகிலுள்ள நகரம் : சிவகங்கை
கோயில் முகவரி : அருள்மிகு சண்முகநாதர் திருக்கோவில் , அருள்மிகு திருவண்ணாமலை ஆதீனம், குன்றக்குடி – 630 206, சிவகங்கை மாவட்டம்.