• Download mobile app
13 Dec 2025, SaturdayEdition - 3594
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ராயல்கேர் மருத்துவமனையில் தேசிய பாதுகாப்பு தினம் அனுசரிப்பு

March 4, 2024 தண்டோரா குழு

கோவை ராயல்கேர் மருத்துவமனையில் தீ மற்றும் மருத்துவமனை பாதுகாப்பு துறை சார்பில் தேசிய பாதுகாப்பு தினம் அனுசரிக்கப்பட்டது.

மருத்துவமனையின் தலைவர் டாக்டர் K.மாதேஸ்வரன் தலைமையில் பாதுகாப்பு துறையின் தலைவர் டாக்டர் M.சுதாகரன், மருத்துவ இயக்குனர் டாக்டர் B.பரந்தாமன் சேதுபதி,முதன்மை செயல் அலுவலர் டாக்டர்
K.T. மணிசெந்தில்குமார்,தலைமை நுண்ணுயிரியலாளர் & தர அமைப்பு தலைவர் டாக்டர் D.காந்திராஜ் , மேலாளர் K.லலித் சித்ரா, பாதுகாப்பு அதிகாரி செல்வகுமார் மற்றும் மருத்துவர்கள் , ஊழியர்கள் முன்னிலையில் விஞ்ஞானி டாக்டர் ராமன் சிவகுமார் மருத்துவமனை வளாகத்தில் தேசிய பாதுகாப்பு கொடியை ஏற்றினார்.

பின்னர் கலந்து கொண்ட அனைவரும் பாதுகாப்பு குறித்த உறுதிமொழி ஏற்றனர்.
அதன்பின், மருத்துவமனை கருத்தரங்க வளாகத்தில் சிறப்பு விருந்தினர் சுற்று சூழல் பாதுகாப்பு மற்றும் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்த சிறப்புரையில் மறுசுழற்சி முறையில் பிளாஸ்டிக் சாதனங்கள் இயற்கை வளம் குன்றாமல் மீண்டும் பயன்படும் வழி வகைகளை விளக்கினார்.

அதனை தொடர்ந்து மருத்துவமனையில் தீயின் பல்வேறு வகைகளையும் , அதனை அணைக்கும் நுட்பங்கள் பற்றிய விரிவான செயல்முறை விளக்கம் நடைபெற்றது.

மருத்துவமனை தலைவர் டாக்டர் K.மாதேஸ்வரன் கூறும்பொழுது,

மருத்துவமனையில் பிளாஸ்டிக் உபயோகம் கூடிய மட்டிலும் அல்லது முடிந்த அளவு தடை செய்யப்பட்டதாகவும் , சுற்று சூழல் பாதுகாப்பிற்காக உயிரின் சுவாசம் என்னும் உன்னத திட்டத்தின் மூலம் 100 மாதங்களில் 10 கோடி மரங்கள் நடும் முயற்சியில் இதுவரை 75 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு பசுமையான இயற்கை சூழல் உள்ள மாவட்டத்தை உருவாக்க பங்களித்து வருகிறது என கூறினார்.

முன்னதாக நடைபெற்ற பாதுகாப்பு தின விழாவில் 500 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் , ஊழியர்கள் பங்கேற்றனர்.

மேலும் படிக்க