• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தனலட்சுமி ஆறுச்சாமி பொன்விழா பல்நோக்கு அரங்கத்தின் திறப்புவிழா – ஆளுநர் ஆர்.என் ரவி பங்கேற்பு

March 8, 2024 தண்டோரா குழு

கோயம்புத்தூர், கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் 50 ஆவது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீமதி தனலட்சுமி ஆறுச்சாமி பொன்விழா பல்நோக்கு அரங்கத்தின் திறப்புவிழா இன்று நடைபெற்றது.

இவ்விழாவில் தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று அரங்கத்தைத் திறந்துவைத்துச் சிறப்புரையாற்றினார்.

அவா்தம் உரையில்,

“உலகத்தரம் வாய்ந்த ஒரு கல்வி நிறுவனமாகக் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியை முனைவா் மா. ஆறுச்சாமி இளைய தலைமுறைக்காக உருவாக்கியுள்ளார் என்றும் கடந்த ஐம்பது ஆண்டுகளில் இந்தக் கல்லூரி தனக்கான ஓா் அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் குறிப்பிட்டார். உழைப்பும் உள்ளார்ந்த அா்ப்பணிப்புமே இதன் வளா்ச்சிக்குக் காரணம் என்றும் கற்பித்தல் திறனிலும் ஆராய்ச்சி நுட்பத்திலும் சிறந்து விளங்கும் இக்கல்லூரி பொன்விழாவுடன் பவளவிழா,வைரவிழா ஆகியவற்றையும் கொண்டாட வேண்டும் என்றும் வாழ்த்தினார்.

ஒரு காலத்தில் நம் நாட்டை உலகநாடுகள் அவ்வளவாகப் போற்றவில்லை என்றும் ஆனால் இன்று நிலைமை மாறியுள்ளது, பாரதத்தின் கடவுச்சீட்டை இன்று உலகமே மதிக்கிறது என்றும் குறிப்பிட்டார். மிக விரைவில் பாரதம் உலகின் மூன்றாவது தலைசிறந்த பொருளாதார நாடாக மாறவுள்ளது என்றும் நம் பண்பாட்டையும் பழமையையும் திறமையையும் பல நாடுகள் போற்றுகின்றன என்றும் கூறினார்.

அத்துடன் மகளிர் மேம்பாட்டுக்காக மத்திய அரசு கொண்டுவந்துள்ள முத்ரா திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைப் பட்டியலிட்டார்.இத்திட்டங்களால் மகளிர் தொழில்முனைவோர்களாக வளர்ந்து நாட்டின் வளர்ச்சிக்கும் துணைசெய்கின்றனா் என்று பாராட்டினார். இளைய தலைமுறையான மாணாக்கர்களின் கனவுகள் பெரிதாக இருக்க வேண்டும் என்றும் அந்தக் கனவுகளை நனவாக்க ஓயாத உழைப்பும் திட்டமிடுதலும் தேவை என்றும் புதிய பாரதத்தை உருவாக்குவதில் மாணவ, மாணவியரின் பங்கு முக்கியமானது” என்றும் வலியுறுத்தினார்.

இவ்விழாவில் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் செயலா் மற்றும் இயக்குநா் டாக்டா் சி.ஏ. வாசுகி தலைமையுரையாற்றினார்.முன்னதாக, கல்லூரி மேலாண்மைக் குழுவின் தலைவா் பொறியாளா் ஆா்.சோமசுந்தரம் வரவேற்புரையாற்றினார்.விழாவின் நிறைவில் கல்லூரியின் பொருளாளா் மருத்துவா் ஓ.என்.பரமசிவன் நன்றி உரையாற்றினார்.

மேலும் படிக்க