March 8, 2024 தண்டோரா குழு
சர்வதேச மகளிர் தினமான இன்று (08-03-24) ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் கீழ் செயல்பட்டு வரும் ’லிபாஸ் தையல் பயிற்சி மையத்தில்’பயிற்சியை முடித்த எட்டு பெண்களுக்கு தையல் இயந்திரம் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
மேலும்,தேசிய மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று இஸ்லாமிய மாணவியர் அமைப்பு சகோதரிகள் (கோவை) மாநகராட்சியின் தூய்மை பணிப் பெண்களை நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.அவர்களுக்கு GIO அமைப்பின் சார்பாக வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் கோவை இஸ்லாமிய மாணவியர் அமைப்பின் தலைவி. மர்யம் ஃபர்ஹானா,(B.E)சகோதரி ருக்யா தஸ்னிம்(B. A)(LAC உறுப்பினர்) மற்றும் சகோதரி ஜெசிலா (உறுப்பினர்)ஆகியோர் கலந்துகொண்டு, “சுகாதார துறையில் பெண்களின் முக்கியத்துவம் மற்றும் அவர்களின் பங்களிப்பு” குறித்து
உரையாற்றினார்கள்.
மேலும், அவர்களை கௌரவைக்கும் வகையில் சால்வை போர்த்தி,சிறப்பு பேட்ஜ் அணிவித்து,இனிப்புகள் வழங்கப்பட்டது. தூய்மை பணியாளர்கள் அவர்கள் சந்திக்கும் சவால்களை பற்றியும் அதை கடந்து வந்து சாதிப்பதை பற்றியும், குப்பைகளை தெருக்களில் வீசி மாசு படுத்தலை தவிர்த்து எங்களிடம் கொடுங்கள் என்று அவர்களின் கோரிக்கையை பகிர்ந்தார்கள்.அவர்களை சந்தித்து கவுரவ படுத்தியதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டனர்.அன்புடன் அவர்களது அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.