March 29, 2024 தண்டோரா குழு
விடுதி கட்டணத்தின் மீது 18 % ஜி.எஸ்.டி., வரி விளக்கு உள்ளதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வணிகத்திலும்,கல்வியிலும் வேகமான வளர்ச்சியை எட்டி வரும் இந்தியாவில், மகளிருக்கான முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது.நாட்டின் வளர்ச்சியில் மகளிரின் பங்கு மிக முக்கியமானதாக உள்ளது. பெண்களின் கற்றலும்,பணி ஆற்றலும் மேம்பட்டு வருகிறது.
இந்நிலையில், மாதந்தோறும் 12 ஆயிரம் ரூபாயிலிருந்து 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறும் பெண்கள்,பலர் விடுதிகளில் தங்கி பணியாற்றுகின்றனர்.இவர்கள் மாதந்தோறும் சுமார் 6,000 ரூபாய் விடுதி கட்டணத்திற்கு செலவிடுகின்றனர்.
சமீபகாலமாக தமிழ்நாடு ஜி.எஸ்.டி., துறையானது,அனைத்து விருந்தினர் விடுதி, விடுதி உரிமையாளர்கள், தங்களது கட்டணத்திற்கு 18% ஜி.எஸ்.டி.,வசூலித்து கட்டுமாறு ஆணையிட்டு இருந்தார்கள்;. ஏற்கனவே சமுதாய,பொருளாதார சவால்களால் பாதிக்கப்பட்டுள்ள மகளிருக்கு இது ஒரு சுமையாக அமைந்தது.
கோவை விடுதி உரிமையாளர்கள் சங்கம், இது குறித்து ஜி.எஸ்.டி., அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு பெற்றது.தங்குமிட சேவைக்கு, 2017, ஜூன் 28 அன்று வெளியான மத்திய வரி கட்டண அறிக்கையின் நுழைவு எண்கள், 12, மற்றும் 14 அறிவிப்பின்படி,விதிவிலக்கு அளிக்க தகுதி உள்ளது என வாதிட்டார்கள். ஆனால், அதிகாரிகள், விடுதிகள், ஒட்டுமொத்த வர்த்தக செயல்பாட்டின் கீழ் உள்ளது.இட வசதி,உணவு மற்றும் பிற வசதிகள் அனைத்தும்,ஓட்டல்களுக்கு உள்ளது போன்றே வரிவிகிதத்தில் வரும் என தெரிவித்தனர்.
கோவையில் 500-க்கும் மேற்பட்ட விடுதிகள், மற்றும் விருந்தினர் தங்குமிடங்கள் உள்ளன. இந்த முடிவை எதிர்த்து கோவை விடுதி உரிமையாளர்கள் சங்கத்தினர், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த நீதிமன்றம், விடுதி கட்டணங்களுக்கு ஜி.எஸ்.டி ரத்து செய்து உத்தரவிட்டது.
விடுதி உரிமையாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களுக்காக வாதிட்ட அட்வகேட் அபர்ணா நந்தக்குமார்,மகளிர் விடுதி நடத்தி வரும் வாதிகள், தங்குமிடம், உணவு சேவைகளை அளித்து வருகின்றனர். மேலும்,இது குடியிருப்புக்கான சேவையின் கீழ் வருவதால், விலக்கு அளிக்க தகுதியானது என்று வாதிட்டார்.
நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி,மனுதாரர் கூறியுள்ளது போன்று,வேலையில் உள்ள மகளிருக்கான விடுதி அறைகள், குடியிருப்புக்கான பிரிவில் வருவதால் இதற்கு விதிவிலக்கு அளித்து உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பின் விபரம் வருமாறு:
வாழ்வதற்கு ஒவ்வொருவருக்கும் ஒரு இருப்பிடம் தேவை.விடுதி அறைகள், பெண்கள், மாணவியர் என அனைவரும் தங்குவதற்கான இடம்.இந்த குடியிருப்பு, ஒருவருக்கு ஒருவர் வேறுபடும்.அவரவர் நிதிநிலைக்கு ஏற்பட விடுதி அறையில் தங்குகின்றனர்.தங்குதல், உறங்குதல், உணவருந்துதல், துவைத்தல் போன்றவைகளையும் அறையில் மேற்கொள்கின்றனர்.
இரண்டாவது பிரதிவாதியின் வாதத்தின்படி, பணியில் உள்ள ஒரு பெண், 15,000 ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரை சம்பளம் பெறுகிறார். 6000 ரூபாயை வாடகையாக கொடுக்கிறார். அதே அலுவலகத்தில் மேலாளராக பணியாற்றும் ஒருவர், 30,000 ரூபாயிலிருந்து 50,000-ம் ரூபாய் வரை சம்பளம் பெறுகிறார். அவருக்கு விலக்கு அளிக்கப்படுவதும், ஜி.எஸ்.டி.,யின் கீழ் வரும். ஏழை மக்களிடம் வரி வசூலிக்க வேண்டும் என்பது சட்டத்தின் நோக்கம் அல்ல. வாழ்விட குடியிருப்பு என நுழைவு எண் 12, 2017 அறிக்கை என்பது ஏழை, பணக்காரரையும் சார்ந்தது.
இந்த வழக்கை பொறுத்தவரை, ஜி.எஸ்.டி., வரி விதிப்பானது, விடுதியில் தங்கி சேவை பெறுபவரின் பார்வையிலிருந்து பார்க்கப்பட வேண்டும். சேவை வழங்குபவரின் பார்வையிலிருந்து அல்ல. இரண்டாவது பிரதிவாதியின்படி, ஜி.எஸ்.டி.,யானது, தங்களிடம் பெறும் கட்டணத்திலிருந்து, சேவை வழங்குபவரின் வருவாயிலிருந்து செலுத்த வேண்டும். ஜி.எஸ்.டி வரி என்பது, சேவை பெறுபவரிடமிருந்து வசூலிக்கப்பட வேண்டும்.சேவை தருபவரிடமிருந்து அல்ல. சேவை வழங்குபவரை பொறுத்தவரை, சேவை பெறுபவரிடமிருந்து ஜி.எஸ்.டி வசூலித்து, அரசுக்கு செலுத்த வேண்டும். என தீர்ப்பில் விளக்கம் தரப்பட்டிருந்தது.
பல ஆயிரக்கணக்கான வேலைக்கு செல்லும் பெண்கள், மாணவர்கள்,நகரங்களுக்கு இடம் பெயர்கின்றனர்.வாழ்கைக்கும், தங்குவதற்கும் அவர்களது வசதிக்காக விடுதியை நாடுகின்றனர்.ஏழ்மை நிலையில் இருக்கும் இவர்களின் விடுதி கட்டணத்தின் மீதான 18 சதவீத வரி அவர்களை மேலும் பலவீனப்படுத்தும்.
இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.