June 3, 2024 தண்டோரா குழு
புகையிலை பழக்கத்தினால் ஏற்படும் தீய விளைவுகளை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த,ஒவ்வொரு வருடமும் உலக புகையிலை எதிர்ப்பு தினம் கொண்டாடப்படுகிறது.இதை முன்னிட்டு ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லுரி மற்றும் மருத்துவமனை சார்பாக நடைபெற்ற நிகழ்வில் கோவை பந்தய சாலை பகுதியில் எஸ் என் ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் – இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர் தலைமை தாங்கி கொடியசைத்து விழாவினை தொடங்கி வைத்தார்.
கல்லூரியின் பேராசிரியர்கள், மாணவர்கள், மற்றும் அலுவலர்கள் இந்நிகழ்ச்சியில் பங்குபெற்று சைக்கிளிங் மற்றும் நடைபயணம் சென்று பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விழிப்புணர்வு பிரச்சார சீட்டுகள் வழங்கி புகையிலைனால் ஏற்படும் தீமைகள் மற்றும் உடல் உபாதைகளை பற்றிய விளக்கங்களை வழங்கினர்.
இதனை தொடர்ந்து புகையிலை பழக்கத்தை எதிர்த்து உறுதிமொழி மற்றும் கையெழுத்து பொதுமக்களிடம் இருந்து பெறப்பெற்றது. ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவகல்லூரியின் முதல்வர் தீபானந்தன் மற்றும் கோவை பந்தய சாலை காவல் நிலையத்தின் ஆய்வாளர் அர்ஜுன் மற்றும் எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி ராம்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று இவ்விழாவினை தொடங்கி வைத்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சி பொது மக்களுக்கு புகையிலை உபயோகிப்பதால் ஏற்படும் உடல் நல பாதிப்புகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது.