June 8, 2024 தண்டோரா குழு
எல்ஜி எக்யுப்மென்ட்ஸ் (பிஎஸ்இ : 522074, என்எஸ்இ: எல்ஜிஎக்யுப்), உலகின் முன்னணி கம்ப்ரஷர் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று. கம்ப்ரஷர் இயந்திரங்களை உருவாக்குவதில் 64 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வரும் இந்த நிறுவனம், அதிநவீன ஆற்றலை சேமிக்கும், திறன்மிக்க ஏர் கம்ப்ரஷர் தீர்வை கண்டறிந்துள்ளது. இதை, கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் ஜூன் 6 முதல் 10 வரை நடக்கும் இன்டெக் 2024 கண்காட்சியின் 20வது பதிப்பில் புதிய ஏர் கம்பரசர்களை அறிமுகம் செய்கிறது. கண்காட்சியை 50 ஆயிரம் சர்வதேச வர்த்தகர்கள் பார்வையிட வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
கண்காட்சியின் பிளாட்டினம் ஆதாரமளிப்பவராக உள்ள எல்ஜி எக்யுப்மென்ட், பி ஹாலில் இரண்டாம் எண் அரங்கில் பல்வேறு வகையான ஆற்றல் திறன்மிக்க கம்ப்ரஷர்களை பார்வைக்கு வைத்துள்ளது.
• இஜி எஸ்பி “சூப்பர் பிரிமீயம்” ஏர் கம்பரசர்: எண்ணெய் உயவு கொண்ட சுழல் ஏர் கம்ப்ரஷர், 15 % வரை ஆற்றல் சேமிப்பு திறன் கெண்டது. சிறந்த வகை வாரண்டியுடன், ஈடுஇணையில்லா திறனை, 90 – 110 கிலோ வாட் குறைந்த சுழலில் தரவல்லது.
• இஜி பி.எம் (நிரந்தர காந்தம்) ஏர் கம்பரசர்: இந்த எண்ணெய் உயவு கம்ப்ரஷர்கள், 11 – 45 கிலோவாட் அளவிட்டிலிருந்து கிடைக்கிறது. 15 % ஆற்றல் சேமிப்பு திறன் கொண்ட இது, அழுத்தமில்லா காற்றை 16% கூடுதலாக தரவல்லது. அதிகபட்ச செயல்திறன், ஆற்றல் சேமிப்பு திறன், வேறுபட்ட வேலைப்பளு கொள்திறனிலும், 100% பளுவிலும் நீண்ட ஆயுள் சுழற்சி மதிப்புகளை கொண்டது.
• டிஎஸ்15எல்டி நேரடி இயக்க பிஸ்டன் கம்ப்ரஷர்: நவீன கட்டுப்பாட்டுடன் கூடிய 7.5 செங்குத்து நிலையிலான ஏர் கம்ப்ரஷர் அடுத்த தலைமுறைக்கானது. சிறப்பான செயல்திறனை கொண்டுள்ளதோடு, நம்பகத்தன்மை, எளிதான பராமரிப்பு போன்றவை , பயன்படுத்துவோர் ஒவ்வொருவருக்கும் சிறப்பான முதலீடாக அமையும்.
• தி இ என் சீரியஸ் எஙகேப்சுலட்டட் ஸ்க்ரூ ஏர் கம்ப்ரஸர் : இஎன்11 – 7.5விஎப்டி: 500 லிட்டர் டேங்க் உடன், உலர்த்தியும் ஒருங்கிணைக்கப்பட்ட விஎப்டி கம்ப்ரஷர். நம்பகத்தன்மை மிக்க இந்த கம்ப்ரஷருக்கு குறைவான பராமரிப்பு மட்டுமே தேவைப்படும். தொழில் ரீதியான பயன்பாட்டிற்கு ஏற்ற பொருத்தமான அளவு, சிறப்பான செயல்திறன் மற்றும் நியாயமான விலையில் கிடைக்க கூடியது.
• ஏ.பி., தொடர் 22 கிலோவாட் எண்ணெய் உயவு இல்லா சுழல் ஏர் கம்ப்ரஷர்: மிகவும் துாய்மையான காற்றை, சிறப்பான ஆற்றல் சேமிப்பு திறனுடன் வழங்கவல்லது. குறைவான பராமரிப்பு செலவில், நிலைத்த தன்மை கொண்டதாக இருக்கும். சுற்றுச் சூழலுக்கும் பொறுப்பானதாகவும் சிறப்பானதாகவும் இருக்கும்.