January 24, 2017 தண்டோரா குழு
பிரபலமான போராட்டங்கள் நடைபெறும் போது அங்கே சமூக விரோத சக்திகள் ஊடுருவ முயற்சி செய்கின்றன என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டே கட்ஜு கூறியுள்ளார்.
இது குறித்து அவர் “டுவிட்டர்” பக்கத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது;
“ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் இறுதி நாளில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. இந்தப் பிரச்சினையானது அங்கு அமைப்பு மற்றும் தலைமை இல்லாததால் நடைபெற்றுள்ளது. தலைமை இல்லாததன் விளைவு போராட்டத்தில் சிலரிடம் ஒழுக்கமில்லை, வெவ்வேறு தரப்பு மக்கள் பல்வேறு திசைகளை நோக்கி போராட்டத்தை இழுத்து செல்கிறார்கள்.
சில விஷயங்களில் ஒருதரப்பு மக்கள் ஒத்துக்கொண்டால், மற்றவர்கள் உடனடியாக நிராகரிக்கிறார்கள். எப்போது எல்லாம் பிரபலமான போராட்டங்கள் நடைபெறுகிறதோ, அப்போது எல்லாம் அங்கே சமூக விரோத சக்திகள் ஊடுருவ முயற்சி செய்கின்றன. அந்த சக்திகள் கெடுதலை ஏற்படுத்தவும் சில விஷமங்களைச் செய்கின்றன. ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் இப்போது நடைபெற்ற சம்பவங்களைப் பார்க்கும் போது மிகவும் வருத்தம் அடைகிறேன்.”
இவ்வாறு கட்ஜு கூறியுள்ளார்.