• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் 5 நாட்கள் அக்ரி இன்டெக்ஸ் வேளாண் கண்காட்சி வரும் 11″ம் தேதி துவக்கம்

July 6, 2024 தண்டோரா குழு

கோவை கொடிசியா தொழிற் கூட கண்காட்சி வளாகத்தில் “அக்ரி இன்டெக்ஸ் 2024” என்ற தலைப்பில் 22″ஆம் ஆண்டு வேளாண் கண்காட்சி சர்வதேச அளவில் நடைபெற உள்ளது இதற்காக கோவை கொடிசியா வளாகம் முழுவதும் அரங்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இது குறித்த செய்தியாளர் சந்திப்பு கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது அப்போது அவர்கள் செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில்

22″ஆவது ஆண்டு ஒருங்கிணைந்த வேளாண் கண்காட்சி ஆனது கோவை கொடிசியா தொழில் கூட கண்காட்சி வளாகத்தில் வரும் 11″ம் தேதி துவங்கி 15″ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது.

வழக்கமாக நான்கு நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சி இந்த ஆண்டு ஐந்து நாட்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது இதற்கு முக்கிய காரணம் நான்க நாட்கள் போதிய அளவில் இல்லை என்று பலரும் கருத்து தெரிவித்த நிலையில் அந்த கருத்தின் அடிப்படையில் ஐந்து நாட்களாக அக்ரி இன்டெக்ஸ் கண்காட்சி நடைபெற உள்ளது.இதற்காக 498 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

மலேசியா சிங்கப்பூர் சைனா தென்கொரியா உட்பட பல்வேறு வெளிநாடுகளிலும் இருந்தும் இந்த கண்காட்சியில் அரங்கில் அமைத்து கலந்து கொள்ள உள்ளனர் மேலும் ஜப்பான் நாட்டிலிருந்து சிறப்பு வேளாண் குழுவினரும் அந்த கண்காட்சியில் பார்வையிட்டு அவர்களுடைய பல்வேறு தொழில்நுட்பங்களையும் எடுத்துக் கூற உள்ளனர் மேலும் இந்த கண்காட்சியில் எவ்வாறு ஒரு விவசாயி தங்களுடைய உற்பத்தி பொருளை சந்தைப்படுத்தி லாபம் பெற முடியும் அதற்கு என்னென்ன வழிகள் உள்ளது அவர்களுக்கு தேவையான ஆலோசனைகள் என அனைத்தும் வழங்கப்பட உள்ளது மேலும் இந்த கண்காட்சி வளாகத்தில் கால்நடைகளுக்கு தனியாக அரங்குகளும் அமைக்கப்பட்டு உள்ளது.

மேலும் நீரின்றி விவசாயம் குறைந்த அளவில் நீரை பயன்படுத்தி விவசாயம் போன்ற பல்வேறு தொழில்நுட்பங்களையும் காட்சிக்கு முன் வைக்க உள்ளோம் எனவும் தொடர்ந்து தமிழக அரசும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் இந்திய அளவில் உள்ள பல்வேறு மாநிலங்கள் அந்தந்த மாநிலங்களின் வேளாண்துறை மற்றும் மத்திய அரசு ஆகிய அனைத்தும் ஒருங்கிணைந்து இந்த கண்காட்சியில் கலந்து கொண்டு வேளாண் துறை சம்பந்தமான அனைத்து விளக்கங்களையும் வாங்கி தொழில் நுட்பங்களையும் கண்காட்சிக்கு வைக்க உள்ளனர் சுமார் ஒன்னரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த கண்காட்சியில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பாக உள்ளது என இவ்வாறு தெரிவித்தனர்.

மேலும் படிக்க