• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஈஷாவிற்கு TNPL-திண்டுக்கல் டிராகன்ஸ் அணியினர் வருகை!

July 12, 2024 தண்டோரா குழு

கோவை ஈஷா யோக மையத்திற்கு TNPL விளையாட்டுத் தொடரில் ஆடும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியினர் இன்று (12/07/2024) வருகை புரிந்தனர்.அப்போது திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் பயிற்சியாளர் குரு கேதார்நாத் “ஈஷாவின் சூழல் தரும் அனுபவம் வெறும் வார்த்தைகளில் கூற முடியாது, அதனை உணரத் தான் முடியும்” எனக் கூறினார்.

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) எனும் கிரிக்கெட் போட்டித் தொடர் நடைப்பெற்று வருகிறது. அந்த வகையில் இந்தாண்டிற்கான போட்டிகள் இம்மாதம் துவங்கி தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நடைப்பெற்று வருகிறது.

இந்நிலையில் TNPL தொடரில் ஆடும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர், கேப்டன் மற்றும் சக வீரர்கள் உள்ளிட்ட 20 பேர் கொண்ட குழு ஈஷாவிற்கு வருகை புரிந்தனர். அவர்கள் ஈஷாவில் சூர்யகுண்டம், லிங்கபைரவி, தியானலிங்கம் மற்றும் ஆதியோகி ஆகிய இடங்களில் தரிசனம் செய்தனர்.

திண்டுக்கல் அணியின் பயிற்சியாளர் இவ்வருகை குறித்து கூறுகையில்,

“தற்போது TNPL தொடரில் ஆடி வருகிறோம். லீக் விளையாட்டுகளில் ஆடுவதற்காக கோவை வந்துள்ளோம். ஈஷாவிற்கு எப்போது வந்தாலும் இந்த மொத்த சூழலுமே மிக அருமையாக இருக்கிறது. அதனால் அமைதியாகவும், மன குவிப்புத்திறன் அளிக்க கூடியதாகவும் மற்றும் மிகவும் ரிலாக்ஸாகவும் இருக்கிறது. இது எங்களுக்கு எப்போதும் உதவியாக இருக்கும். இந்த அனுபவத்தை வெறும் வார்த்தைகளில் விவரிக்க முடியாது. அதனை உணரத்தான் முடியும்” எனக் கூறினார்.

கோவை ஈஷா யோகா மையம், தமிழகத்தில் மிக முக்கிய ஆன்மீகத் தலமாக இருந்து வருகிறது. ஈஷாவிற்கு ஆண்டுதோறும் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் இருந்து ஆதியோகியை தரிசிக்கவும், யோகப் பயிற்சிகள் மேற்கொள்ளவும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்வது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க