• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் முப்பெரும் விழா

July 15, 2024 தண்டோரா குழு

அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் தோல் தான விழிப்புணர்வு குறித்த கருத்தரங்கம், அமைப்பின் புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கி கெளவிரத்தல், ஆயுள் காப்பீடு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் என முப்பெரும் விழா கேரள கிளப்பில் நடைப்பெற்றது.

இந்நிகழ்விற்கு அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழக நிறுவனர் & தலைவர் ஆர்.கே.குமார் தலைமை உரையாற்றினார். பொதுச்செயலாளர் Dr.V.H.சுப்ரமணியம், கெளர தலைவர் சுந்தர வடிவேலு, மாநில தலைவி லதா அர்ஜூனன், மாநில தலைவர் ராஜேஷ் குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

மேலும்,சிறப்பு விருந்தினர்களாக கங்கா மருத்துவமனை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் ராஜா சண்முக கிருஷ்ணன் மற்றும் உலக மலையாளி கவுன்சில் தலைவர் ராதா கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

இந்த நிகழ்வில் தோல் தான விழிப்புணர்வு குறித்த விரிவான விளக்கங்களையும் அவசியத்தையும் மருத்துவர் ராஜா சண்முக கிருஷ்ணன் அனைவருக்கும் எடுத்துரைத்தார்.

சிறப்பு விருந்தினராக கலந்து ரோட்டரி ஆளுநரும்,மூத்த வழக்கறிஞருமான சுந்தர வடிவேலு பேசுகையில்,

அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது தோல் தான விழிப்புணர்வு குறித்த நிகழ்வு நிகழ்வில் இவர்களுடன் ரோட்டரி கிளப்பும் இணைந்து கைகோர்த்து மக்களுக்கு தோல் தான விழிப்புணர்வை எடுத்துரைக்கும் என்பதில் உறுதி அளிக்கிறேன் என்றார்.

மேலும் இந்த நிகழ்வில் மாவட்ட தலைவர்கள் ரமேஷ்குமார், பாலசுப்ரமணியம்,துணை தலைவர்கள் செந்தில்குமார்,எல்.ஐ.சி.ராஜேஷ்,மாவட்ட செயலாளர் விஜய் ராவ்,மகளிரணி ஒருங்கிணைப்பாளர் இசை கலைவாணி சாந்தினி,இயக்குநர் ஐஸ்வர்யா, மகளிரணி மாவட்ட செயலாளர் எல்.ஐ.சி சாந்தி, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் டிரஸ் ஆர்ட் அப்பு, செபாஸ்டியன், ராமஜெயம், சந்திரசேகர்,கணேசமூர்த்தி, திருப்பூர் ராமசாமி,இயக்குநர் குமார் தங்கவேல், போட்டோ சிவா,பாபு, வழக்கறிஞர் சந்தோஷ்,அரசு பள்ளி ஆசிரியர் முத்தமிழ் செல்வி,விவேக் மற்றும் அனைத்து உறுப்பினர்கள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க