January 24, 2017
தண்டோரா குழு
பீட்டா அமைப்புக்குத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தொடங்கியதிலிருந்தே, ஜல்லிக்கட்டுக்கு எதிராக உள்ள பீட்டா அமைப்பைத் தடை செய்ய வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
இந்நிலையில், தமிழகத்தில் பீட்டா அமைப்பினைத் தடை செய்ய வேண்டும் என்று சூரியப்பிரகாசம் என்ற வழக்குரைஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அத்துடன் இவ்வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.ஆனால், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று கூறிய நீதிபதி வழக்காகத் தொடர்ந்தால் புதன்கிழமை விசாரிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
பீட்டா அமைப்பைச் சேர்ந்த ராதா ராஜன், மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி ஆகியோர் தமிழ்ப் பண்பாட்டுக்கு எதிராகப் பேசி வருவதால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது மனுவில் சூரியப் பிரகாசம் குறிப்பிட்டுள்ளார்.