July 21, 2024 தண்டோரா குழு
பொது மக்களிடம் மன ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இன்று இந்த மரத்தான் தொடர் ஓட்டம் கோவை நேரு அரங்கில் தொடங்கி 3,5 மற்றும் 10 கிலோமீட்டர் ஓட்டங்கள் நடைபெற்றன.
பொது மக்களிடம் மனஅழுத்தம் மற்றும் மாணவர்களிடம் போதைப்பொருள் அதிகரித்து வரும் இன்றைய காலகட்டத்தில் இந்த மாரத்தான் விழிப்புணர்வு அவசியமான ஒன்றாகும். இந்திய மனநல மருத்துவ சங்கம், தமிழ்நாடு மற்றும் கொங்குநாடு மனநல அறக்கட்டளை சார்பில் இந்த விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றத்து.
ஆண்கள்,பெண்கள் மற்றும் குழந்தைகள் என சுமார் 1200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு காவல் துறையின் முன்னாள் டிஜிபி டாக்டர் ரவி ஐ .பி .ஸ் கலந்து கொண்டார்.
மேலும் இந்த விழாவில் தமிழ்நாடு மனநல சங்கத்தின் தலைவர் டாக்டர். பன்னீர்செல்வம்,இந்திய மருத்துவ சங்கம் கோவை கிளையின் தலைவர் டாக்டர் பிரியா கார்த்திக்பிரபு மற்றும் கொங்குநாடு மனநல அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் பிரதீப் மற்றும் உறுப்பினர்கள் டாக்டர் ஸ்ரீனிவாசன், டாக்டர் வெங்கடேஷ்குமார், டாக்டர் மணி கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு தொகை மற்றும் கேடையங்களை வழங்கினார்கள்.
இந்திய மனநல மருத்துவ சங்கம், தமிழ்நாடு சேப்டரின் 39வது மாநில மாநாடு வருகின்ற ஜூலை 27 மற்றும் 28 தேதிகளில் கோவை ஜென்னிஸ் கிளப் அரங்கில் நடைபெற உள்ளது. இந்த மாநில மாநாட்டை கொங்குநாடு மனநல மருத்துவ சங்கம் “மனநல மருத்துவ துறையின் புதுமைகள் ” என்ற தலைப்பில் நடத்த உள்ளது. இதில் தமிழ்நாடு, புதுவை மற்றும் இதர பகுதிகளில் உள்ள சுமார் 800 மனநல மருத்துவர்கள் மற்றும் மனநல முதுகலை பட்டதாரி மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற உள்ளனர்.
இதில் இந்தியாவின் முன்னணி மருத்துவ மனைகளான எய்ம்ஸ், நிம்ஹன்ஸ் , ஜிப்மர் மனநல மருத்துவர்களின் உரையாற்றல்கள் மற்றும் விவாதங்கள் நடைபெற உள்ளன. மேலும் மனநல மருத்துவர்கள் மற்றும் முதுகலை மாணவர்களின் சுமார் 200 ஆராய்ச்சி கட்டுரைகள் இதில் அறிமுகம் செய்யப்படுகிறது.இந்த மாநாட்டின் கலந்து கொண்டு மனநல மருத்துவர்கள் தங்களின் திறமைகளை மேம்படுத்திகொள்ளவும் புதிய கண்டுபிடிப்புகளை பற்றி அறிந்து கொள்ள உதவும்.இந்த புதுமைகள் மனநோயாளிகளின் சிகிச்சையில் பெரிய உதவி செய்யும்.
இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது.