• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மத்திய பட்ஜெட்டிற்கு தேசிய பங்குச் சந்தை நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஆஷிஷ்குமார் சௌகான் பாராட்டு

July 26, 2024 தண்டோரா குழு

பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 3வது முறையாக பதவி ஏற்றதைத் தொடர்ந்து நேற்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த பட்ஜெட் குறித்து தேசிய பங்குச் சந்தை நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஆஷிஷ்குமார் சௌகான் பாராட்டி உள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:-.

2024-25ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.அதில் இந்தியாவில் வேலை வாய்ப்பு உருவாக்கத்திற்கு மிகப்பெரிய ஊக்கம் அளித்துள்ளார். அதே நேரத்தில், அரசுத் துறைக்கு கூடுதலாக வேலை உருவாக்கத்தில் தனியார் துறையும் பங்கேற்பதை உறுதி செய்துள்ளார்.

இதன் காரணமாக இந்தியா நம்பர் 1 ஸ்டார்ட் அப் தேசமாக மாறுவதை இது காட்டுகிறது. மேலும் நாட்டிலுள்ள தொழில் முனைவோர்களுக்கு ஏஞ்சல் வரியில் நிவாரணம் வழங்கி இருப்பதோடு, முத்ரா கடன் திட்ட வரம்பை ஒரு நபருக்கு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக இந்த பட்ஜெட்டில் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் அனைத்து தொழில்களிலும் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதிலும் இந்த பட்ஜெட் கவனம் செலுத்தி உள்ளது.

இதன் காரணமாக இளம் பெண்கள் அனைத்து பணிகளிலும் பங்கேற்பதை அதிகப்படுத்தும்.மேலும் வேலை வாய்ப்பை உருவாக்குவதன் ஒரு பகுதியாக திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்துவதோடு உள்கட்டமைப்பு செலவினங்களை அப்படியே வைத்து, நிதிப் பற்றாக்குறையை 5.1% என்ற எதிர்பார்ப்பில் இருந்து 4.9% ஆகக் குறைப்பது குறித்தும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025-26ல் 4.5% நிதிப் பற்றாக்குறைக்கு வழிவகை செய்வதன் மூலம் இந்தியாவின் நீண்ட கால கடன் மதிப்பீடு மேம்படுவதை உறுதிசெய்யும் நேரடி அல்லது மறைமுக வரி கட்டமைப்பில் அதிக கவனம் செலுத்தாமல் இவை அனைத்தும் அடையப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் இந்த பட்ஜெட்டிற்கு 10க்கு 10 மதிப்பெண் வழங்கி பாராட்டும் வகையில் உள்ளது என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க