• Download mobile app
30 Oct 2024, WednesdayEdition - 3185
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் வரும் ஆகஸ்ட் 3 ந்தேதி சில்லுனு ஒரு ஈவ்னிங் எனும் பொழுது போக்கு கண்காட்சி

July 27, 2024 தண்டோரா குழு

ஏழை பெண்களின் கல்விக்கு நிதி திரட்டும் விதமாக பெண் தொழில் முனைவோர்கள் இணைந்து கோவையில் வரும் ஆகஸ்ட் 3 ந்தேதி சில்லுனு ஒரு ஈவ்னிங் எனும் பொழுது போக்கு கண்காட்சி நடைபெற உள்ளது.

கோவையை சேர்ந்த (Refresh L.L.C.) ரெப்ரஷ் எல்.எல்.சி மற்றும் (Set up Dance Company) செட்டப் டான்ஸ் கம்பெனி ஆகியோர் இணைந்து சில்லுனு ஒரு ஈவ்னிங் எனும் புதிய பொழுது போக்கு கண்காட்சியை வரும் ஆகஸ்ட் 3 ந்தேதி ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள
பிஷப் அப்பாசாமி கல்லூரி வளாகத்தில் நடத்த உள்ளனர்.

ஏழை குடும்ப பெண்களின் கல்விக்கு நிதி திரட்டும் விதமாக நடைபெற உள்ள இந்த கண்காட்சியை முழுவதும் பெண் தொழில் முனைவோர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு சுங்கம் பகுதியில் உள்ள செட் அப் டான்ஸ் கம்பெனி அரங்கில் நடைபெற்றது.

ரெப்ரஷ் எல்.எல்.சி இயக்குனர் மெலினா,ஒருங்கிணைப்பாளர் ரோஷினி எம்சி ரியா, செட் அப் டான்ஸ் கம்பெனி நிர்வாக இயக்குனர் விக்னா,ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்.இதில் கவுரவ அழைப்பாளர்களாக, பெண் தொழில் முனைவோர்கள் புவனா நகுல்,கிரேசி செலின்,ஆகியோர் கலந்து கொண்டனர்.

அனைவரும் குடும்பத்தினருடன் கலந்து கொள்ளும் விதமாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியில்,பெண்கள், தொழில் முனைவோர்,இளம் நடன கலைஞர்கள், கல்லூரி மாணவ மாணவியர் தங்கள் திறமையை வெளிப்படுத்த உள்ளதாகவும், ஒரு நாள் நடைபெற உள்ள கண்காட்சியில், பல்வேறு வகையான உணவு அரங்குகளுடன், காமெடி, ஆடல் பாடல் நிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கான ஆடை அணிகலன் அணி வகுப்புகள், சமையல் போட்டிகள்,நடன நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக ஒருங்கிணைப்பாளர்கள்
தெரிவத்தனர்.

ஏழை,எளிய மாணவ,மாணவியருக்கு உதவிகள் வழங்க நிதி திரட்டும் வகையில் பிற்பகல் 3 மணிக்கு துவங்கி இரவு ஒன்பது மணி வரை நடைபெற உள்ள இந்த கண்காட்சியில் சுமார் நான்காயிரம் பேர் வரை பங்கேற்பார்கள் என நம்பிக்கை தெரிவித்தனர்.

மேலும் படிக்க