• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நடிகை ரம்பா கோவையில் தனது Magick Home என்ற நிறுவனத்தின் 2-வது மையத்தை திறந்து வைத்தார்

August 9, 2024 தண்டோரா குழு

Magick Home, வட அமெரிக்காவில் வீட்டு உள் அலங்கார துறையில் முன்னோடியான நிறுவனமாக இருப்பதுடன், இந்தியாவில் தனது விரிவாக்க முயற்சியில் கோயம்புத்தூரில் இரண்டாவது வீட்டு உள் அலங்கார ஷோரூமைத் தொடங்கியுள்ளது.

திருச்சி ரோட்டில் அமைந்துள்ள இந்த மையத்தை அதன் பிராண்டின் உரிமையாளரான நடிகை ரம்பா இன்று அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார். சினிமா உலகில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு, 8 மொழிகளில் 130 படங்களில் நடித்த ரம்பா, இப்போது இந்தியாவில் Magick Home என்ற நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.தன் வெற்றிகரமான நடிகை வாழ்க்கையிலிருந்து புதிய படைப்பாற்றல் துறைக்கு மாறி, இன்டீரியர் வடிவமைப்பு மீது உள்ள அவரது ஆர்வம், இந்த புதிய அத்தியாயத்திற்கான உந்துதலை வழங்கியுள்ளது.

Magick Home நிறுவனம், உலகளாவிய அளவில் பாராட்டப்பட்ட மாடுலர் கிட்சன், படுக்கையறைகள், குளியலறைகள் மற்றும் பர்னிசர்ஸ் உள்ளிட்ட வீட்டு உள் அலங்காரங்களுக்கு பிரத்யேகமாக வடிவமைத்து வழங்குகிறது. உலக சந்தையில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டுள்ள Magick Home நிறுவனத்தின் தொகுப்புகள், அழகிய வடிவமைப்புகளையும் பயன்மிக்க செயல்பாடுகளையும் சுலபமாகக் வழங்குவதுடன், இதன் மூலம் வீட்டின் உள் அலங்காரத்தை எளிமையாகவும் மற்றும் விருப்பமான பட்ஜெட்டிலும் வழங்குகிறது.

தொடக்க விழாவில் தங்களின் கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட நடிகை ரம்பா மற்றும் Magick Home நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிறுவனரான இந்திரகுமார் பத்மநாதன் கூறியதாவது,

Magick Home நிறுவனம் இந்தியாவில் வீட்டு உள் அலங்காரங்களில் புதிய வரையறையை உருவாக்குகிறது. கோயம்புத்தூரில் தொடங்கியுள்ள எங்கள் கிளை, எங்கள் முழுமையான இலக்கை நோக்கி ஒரு சிறிய படியாகும். மேலும், எங்கள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விரிவாக்கத் திட்டத்துடன், ஒரே கூரையின் கீழ் முழுமையான உள் அலங்கார அனுபவத்தை வழங்கும் எங்கள் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக நாங்கள் விரைவில் பர்னிசர்ஸ் மற்றும் வீட்டு அலங்கார துறைகளிலும் நுழைய இருப்பதை பெருமையாக அறிவிக்கிறோம்.”

கோவையில் Magick Home திறக்கப்பட்டது குறித்து நிறுவனத்தின் துணைத் தலைவர் கணேசன் விஸ்வநாதன் கூறும்போது,

”நாட்டின் மிக வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் கோவையும் ஒன்றாகும். மேலும் இந்த தொழில்துறை மையத்தை பயன்படுத்திக் கொள்வது முற்றிலும் தேவையானது. சென்னையிலுள்ள எங்கள் இந்திய தலைமையகத்திற்கு அருகாமையில் இருப்பது எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதில் ஒரு நன்மையாக இருந்தாலும், பிரீமியம் மாடுலர் இன்டீரியர்களை அனைவருக்கும் கிடைக்கச் செய்யும் மற்றும் மலிவு விலையில் உருவாக்குவதற்கான யோசனையுடன் இந்த செழிப்பான தொழில் நகரத்திற்குள் ஊடுருவுவது எங்கள் திட்டம். எங்கள் கோவை அத்தியாயம் விரைவில் தென்னிந்திய சந்தையில் ஒரு கோட்டையை உருவாக்க உதவும்.

மேலும் அடுத்த மூன்று ஆண்டுகளில் நாடு முழுவதும் 30-க்கும் மேற்பட்ட மையங்களை திறப்பதற்கான சரியான பாதையில் நாங்கள் சென்றுகொண்டுயிருக்கிறோம், என்றார்.

மேலும் படிக்க