August 9, 2024 தண்டோரா குழு
SAP லேப்ஸ் இந்தியா (SAP Labs India), பிஎஸ்ஜி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் அப்ளைடு ரிசர்ச் (பிஎஸ்ஜிஐடெக்) (PSG Institute of Technology and Applied Research (PSGiTech) கோயம்புத்தூர் ஆகியவை தங்களின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (எம்ஓயு) இரண்டு ஆண்டுகளுக்கு புதுப்பித்துள்ளன.
மாணவர்களுக்கு தொழில்துறை வெளிப்பாட்டைத் தொடர்ந்து வழங்குதல், கூட்டு ஆராய்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளுதல், SAP தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்தும் சிந்தனை-தலைமைத்துவத்தை வளர்த்தல் ஆகியவை இந்த இப்புதுப்பித்தலின் நோக்கமாகும். மாணவர்களிடையே புதுமை மனப்பான்மையை வளர்ப்பதில் SAP லேப்ஸ் இந்தியாவின் அர்ப்பணிப்புக்கு கல்வித்துறை ஒத்துழைப்பு முக்கியமானது. இந்தியாவில் உள்ள தலைசிறந்த கல்வி நிறுவனங்களுடன் கூட்டு சேர்வதன் மூலம், SAP லேப்ஸ் இந்தியா, தொழில் சார்ந்த தலைப்புகள், முன்னேற்றம் மற்றும் கண்டுபிடிப்புகளை உந்துதல் ஆகியவற்றில் ஆராய்ச்சி ஈடுபாடுகளைத் தொடர்ந்து ஆய்வு செய்கிறது.
சவால் அறிக்கைகள் (தீர்க்கப்பட வேண்டிய சவால்கள்) மற்றும் தொடர்புடைய வளர்ந்து வரும் தலைப்புகளின் அடிப்படையில் நிரலாக்கப்போட்டி (ஹேக்கத்தான்கள்) உட்பட பல்வேறு முன்முயற்சிகள் மூலம் பிஎஸ்ஜிஐடெக் மாணவர்களை ஈடுபடுத்தும் வகையில் இந்த ஒத்துழைப்பு அமைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, SAP லேப்ஸ் இந்தியா, SAP மற்றும் தொடர்புடைய தொழில்நுட்பங்களில் நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்களையும் மாணவர்களையும் மேம்படுத்த ஆராய்ச்சி ஈடுபாடு மற்றும் ஒத்துழைப்பு மையம் (REACH by SAP Labs India) மூலம் அறிவு-பகிர்வு அமர்வுகளை நடத்தும். இந்த கூட்டாண்மையானது புத்தகங்கள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகளை இணைத்தல், கூட்டு ஆர்வமுள்ள தலைப்புகளில் நிபுணர் அமர்வுகளை ஒழுங்கமைத்தல் ஆகியவற்றை உள்ளடக்கியது. SAP லேப்ஸ் இந்தியா ஆனது பிஎஸ்ஜிஐடெக் உடன் லோ-கோட் நோ-கோட், எரிசக்தி செயல்திறனுக்கான குறியீட்டு கட்டமைப்புகள், கிளவுட் வரிசைப்படுத்தல், கிளவுட் செலவு மேலாண்மை போன்ற மற்றும் பல தலைப்புகளில் வேலை செய்து வருகிறது.
எம்.டி., எஸ்ஏபி லேப்ஸ் இந்தியா மற்றும் நாஸ்காம் துணைத் தலைவர் சிந்து கங்காதரன் கூறும்போது,
“SAP-இல், புதுமைதான் முன்னேற்றத்தின் அடிப்படை என்று நாங்கள் நம்புகிறோம். பிஎஸ்ஜிஐடெக் போன்ற கல்வி நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து, எதிர்காலத்தை வடிவமைக்கக்கூடிய தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு உந்துதலாக, திறமை மற்றும் புதிய யோசனைகளின் வளமான தொகுப்பை நாம் பெற அனுமதிக்கிறது. இன்றைய வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப சூழலில், குறிப்பாக உருவாக்கும் திறனுள்ள செயற்கை நுண்ணறிவு எழுச்சியுடன், மாணவர்கள் தங்கள் கல்வியை தொழில் அனுபவம் மற்றும் ஆழமான விஷய நிபுணத்துவத்துடன் மேம்படுத்துவது மிகவும் முக்கியமானது. பிஎஸ்ஜிஐடெக் உடனான எங்கள் ஒத்துழைப்பு, மாணவர்களுக்கு அவர்களின் புதுமையான திறன்களை மேம்படுத்தவும் வெளிப்படுத்தவும், நிஜ உலக சவால்களுக்கு தீர்வுகளை இணைத்து உருவாக்கவும், ஆற்றல்மிக்க பணியாளர்களாகத் தயாராகவும் வாய்ப்பளிக்கிறது. பிஎஸ்ஜிஐடெக் ஆசிரிய உறுப்பினர்கள் மற்றும் மாணவர்களுடன் இந்த ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புப் பயணத்தைத் தொடருவதற்கு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.” என்றார்.
மேலும் டாக்டர் என். சரவணக்குமார் அவர்கள், முதல்வர்-பிஎஸ்ஜிஐடெக் இவ்வாறு கூறினார், “பிஎஸ்ஜிஐடெக் மற்றும் SAP லேப்ஸ் இந்தியா இடையேயுள்ள தற்போதைய தொடர்பு ஒரு கூட்டாண்மை என்பதற்கும் மேலானது; இது கல்வித்துறை, தொழில்துறை ஆகியவற்றுக்கு இடையிலான ஒத்துழைப்பின் சக்தியை அங்கீகரிக்கும் ஒரு பகிரப்பட்ட பார்வை ஆகும். SAP லேப்ஸ் இந்தியாவின் தொழில் அறிவு மற்றும் தொழில்நுட்பப் புத்திசாலித்தனத்தை பிஎஸ்ஜிஐடெக்-இன் கல்விசார் சிறப்புடன் இணைப்பதன் மூலம், தொழில்-கல்வி கூட்டாண்மைகளுக்கு புதிய தரநிலைகளை நாங்கள் அமைக்கிறோம். SAP உடனான இந்த ஒத்துழைப்பு, நவீன அணுகுமுறை, அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் நிஜ-உலகத் திட்டங்களுக்கான அணுகலை எங்கள் மாணவர்களுக்கு வழங்குகிறது, மேலும் அவர்கள் கற்கவும், ஆராயவும் மற்றும் தொழில்துறைக்குத் தயாரான நிபுணர்களாக வளரவும் உதவுகிறது. இந்தப் பயணத்தைத் தொடரவும், உலக அளவில் தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்குப் பங்களிக்கவும் நாங்கள் எதிர்நோக்குகிறோம்.”
மேலும், SAP லேப்ஸ் இந்தியா, பிஎஸ்ஜிஐடெக் ஆகியவை இணைந்து சவால்களை எதிர்கொள்ள, மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு, திட்ட வாய்ப்புகள் ஆகியவற்றை ஆராய்வதற்காக கூட்டுப் பயிலரங்குகளை நடத்தும், மேலும் SAP லேப்ஸ் இந்தியா பெங்களூர் வளாகத்திற்கு அவ்வப்போது வருகை தந்து பிஎஸ்ஜிஐடெக்கின் பரிந்துரைக்கப்பட்ட பிரதிநிதிகளும் மாணவர்களும் தங்கள் உறவுகளை வலுப்படுத்த உதவும். கோட்பாட்டு வகுப்பறை கற்றல், தொழில் நுட்பத்தின் நிஜ-உலகப் பயன்பாடுகள் ஆகியவற்றுக்கு இடையே உள்ள இடைவெளியைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட ஆசிரியர் தொழில்துறை ஈடுபாட்டு திட்டமும் இந்த ஒத்துழைப்பில் அடங்கும். இந்தத் திட்டம் ஆசிரியர்களுக்கு SAP தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறைப் போக்குகளை அவர்களின் பாடத்திட்டத்தில் திறம்பட ஒருங்கிணைக்க அறிவையும் வளங்களையும் வழங்குகிறது, SAP தொழில்நுட்பத்தின் சமீபத்திய முன்னேற்றங்களுக்கும் எதிர்கால வழிகாட்டலுக்கும் அவர்களை வெளிப்படுத்துகிறது, அத்துடன் ஸ்டெம் (STEM) துறைகளில் மாணவர்களை ஈடுபடுத்துவதற்கான புதிய யோசனைகளைத் தூண்டுகிறது.