• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமாரா லீஷர் எக்ஸ்பீரியன்ஸ் நிறுவனத்தின் லிலாக் ஹோட்டல் கோவில் நகரமான கும்பகோணத்தில் துவக்கம்

August 14, 2024 தண்டோரா குழு

தமாரா லீஷர் எக்ஸ்பீரியன்ஸ் நிறுவனம், புனிதப் பயணத் தலங்களில் அதன் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டின் கோவில் நகரமான கும்பகோணத்தில் பிரமாண்டமான ஹோட்டலை தொடங்கியுள்ளது.

இதன் மூலம் தமிழ்நாட்டில் தமாராவின் 3 வது ஹோட்டலை இது ஆகும் . 188 கோயில்களுக்கு பெயர் பெற்ற கும்பகோணம் விருந்தினர்களுக்கு அமைதியான மற்றும் கலாச்சார ரீதியான அமைப்புதன் கூடிய சூழலை விருந்தினர்களுக்கு வழங்குகிறது.

கும்பகோணத்தில் புதிய ஹோட்டலை தாமரா லீஷர் எக்ஸ்பீரியன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் இயக்குநருமான ஸ்ருதி ஷிபுலால் குத்து விளக்கு ஏற்றி தொடங்கிவைத்தார், அதைத் தொடர்ந்து ஹோட்டல் மேலாளர் வி.உன்னிகிருஷ்ணன் ஹோட்டலின் சிறப்பு அம்சங்கள் குறித்து விளக்கினார். குறைந்த விலையில் பிரமாண்ட விருந்தோம்பல் அனுபவங்களை வழங்குவதை முக்கிய நோக்கமாகக்கொண்டுள்ளது.

வெளியீட்டு விழாவில், Tamara Leisure Experiences இன் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ருதி ஷிபுலால் கூறுகையில்,

“ஒரு குழுவாக, நாங்கள் இந்தியாவில் பயணச் சந்தையைப் பற்றி அதிக நம்பிக்கையுடன் இருக்கிறோம். குறிப்பாக தென் இந்தியாவில் மேலும் பல புதிய ஹோட்டல்களை தொடங்குவதற்கான முதலீடு செய்துள்ளோம். கும்பகோணத்தில் எங்கள் லிலாக் ஹோட்டலானது அனைத்து தரப்பு மக்களும் அணுகும் வகையில் கோவில் தலங்கள் மற்றும் வரலாற்றுத் தலங்களுக்குச் செல்லும் பயணிகள் மற்றும் குழுக்களுக்கு ஏற்றதாக இது அமையும். இதன் மூலம் தமிழ்நாட்டில் தாமரா லீஷர் எக்ஸ்பீரியன்ஸின் மூன்றாவது மற்றும் மற்றும் இந்தியாவில் ஒன்பதாவது ஹோட்டல் ஆகும்.

கும்பகோணம் லிலாக் ஹோட்டலின் சிறப்பம்சங்கள்

● கும்பகோணத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த ஹோட்டல் ரயில் நிலையத்திலிருந்து 1 கிமீ தொலைவில் அமைந்துள்ளது மற்றும் நவகிரக கோயில், கருடன் கோயில் மற்றும் காசி விஸ்வநாதர் கோயில் போன்ற புகழ்பெற்ற கோயில்களுக்கு அருகாமையில் அமைந்துள்ளது.

● எக்சிகியூடிவ் ரூம்கள் – 27, பிரீமியம் ரூம்கள் – 13, எலைட் ரூம்கள் – 4 மற்றும் 1 சூட் ரூம் என மொத்தம் 45 ரூம்கள் உள்ளது. குடும்பங்கள் தங்குவதற்கு ரூம்கள் பெரியதாகவும் விசாலமானதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

● நகரின் உள்ளூர் பாரம்பரியத்தால் ஈர்க்கப்பட்ட கட்டிடக்கலை மற்றும் உட்புற வடிவமைப்பு.

● டைனிங்: கேசர் பை லிலாக், 80 இருக்கைகள் கொண்ட ரெஸ்டாரண்ட் , உள்ளூர் உணவு வகைகளை உள்ளடக்கிய மெனுவை வழங்குகிறது. கும்பகோணம் டிகிரி காபி முதல் உயர்ரக குளிர்பானங்கள் என அனைத்தும் இங்கு கிடைக்கும்

● வீடு சுபகாரியங்கள் முதல் சமூக மற்றும் ஆன்மீக விழாக்கள் வரை 60 பேர் வரை அமரும் வகையில் மினி பார்ட்டி ஹால்கள் உள்ளது.

Tamara Leisure Experiences உள்ளூர் பணியாளர்களை பணிக்கு அமர்த்தி வேலைவாய்ப்பை ஏற்படுத்துகிறது மற்றும் உள்ளூர் பொருளாதாரத்தை வளர்கிறது .

மேலும் படிக்க