• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அம்ருதா விஸ்வ வித்யாபீடம் மனித-வனவிலங்கிற்கிடையிலான மோதல்களைத் தவிர்க்க அம்ருதா எலிஃபெண்ட் வாட்ச்சை வெளியிட்டது

August 15, 2024 தண்டோரா குழு

பிரபல கல்வி நிறுவனங்களில் ஒன்றான அம்ருதா விஸ்வ வித்யாபீடம், அதிகரித்து வரும் மனித-வனவிலங்கு மோதல்களை, குறிப்பாக யானைகளை உள்ளடக்கிய “அம்ருதா எலிபேண்ட் வாட்ச்” எனப்படும் செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் கண்காணிப்பு அமைப்பை உருவாக்கியுள்ளது.

இந்த புதுமையான தொழில்நுட்பமானது பல்கலைக்கழகத்தின் அம்மச்சி ஆய்வகத்தால் உருவாக்கப்பட்டது. இது மனிதர்களுக்கும், யானைகள் போன்ற வன விலங்குகளுக்கும் இடையிலான உறவை மேம்படுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த புதுமையான யானை கண்காணிப்பு அமைப்பானது, செயற்கை நுண்ணறிவால் இயக்கப்பட்டு யானை நடமாட்டம் பற்றிய விழிப்பூட்டல்களைப் பயன்படுத்தி மனித மற்றும் விலங்குகளின் தேவைகளுக்கு இடையில் சமநிலையை ஏற்படுத்த உதவுகிறது. இதன் மூலம் குறிப்பிட்ட எல்லைக்குள் யானைகளின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், அவற்றின் நடமாட்டத்தை திசைத் திருப்பவும், கண்காணிக்கவும் செய்யலாம்.

அம்ருதா விஸ்வ வித்யாபீடம், சமூக சவால்களுக்கான தீர்வுகளைக் கண்டு, அதனை நடைமுறைப்படுத்துவதற்கான புதுமையான ஆராய்ச்சி முயற்சிகளில் தனித்துவம் பெறுகிறது. அம்ருதா எலிஃபெண்ட் வாட்ச், புதுமையான செயற்கை நுண்ணறிவு மற்றும் “IOT” தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, யானைகளின் நடமாட்டத்தை கண்டறிவதற்காக கண்காணிப்பு கேமராக்களிலிருந்து வீடியோவினை பகுப்பாய்வு செய்கிறது. இது மொபைல் நெட்வொர்க்குகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இது யானைகளின் நடமாட்டம் குறித்து விவசாயிகள், நில உரிமையாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு உடனடி எச்சரிக்கைகள் அல்லது அறிவிப்புகளை அனுப்ப உதவுகிறது. இந்த தகவல்களின் மூலம் சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்து, மனித-விலங்கிற்கிடையிலான மோதல்களைத் தவிர்க்கலாம்.

அம்ருதா விஸ்வ வித்யாபீடத்திலுள்ள அம்மச்சி லேப்ஸின் ரூரல் டெக்னாலஜிஸின் தலைவர் பாலு மோகன்தாஸ் மேனன், இதனைக் குறித்து கூறுகையில்,

“சமூக சவால்களை எதிர்கொள்வதற்கான புதுமையான தொழில்நுட்ப தீர்வுகளை தொடர்ந்து உருவாக்கி வரும் திறன்மிக்க ஆராய்ச்சி குழு எங்களிடம் உள்ளது என்றும், அம்ருதா எலிஃபெண்ட் வாட்ச் என்னும் இந்த முயற்சியானது வனவிலங்கு பாதுகாப்பை நோக்கிய ஒரு முன்னோடியாக இருப்பது மட்டுமல்லாது, மக்களின் உயிர் மற்றும் வாழ்வாதாரத்தை பாதுகாத்தல் போன்றவற்றிலும் முக்கிய இடம் வகிக்கிறது என்றும் ​​இந்த தொழில்நுட்பத்தை சமூகத்தில் நடைமுறைப்படுத்தி, சுற்றுச்சூழலில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்றும் கூறினார்.

அம்மச்சி லேப்ஸின் பாலு மோகன்தாஸ் மேனன் தலைமையிலான ஐயப்பன் அஜன், ராமகிருஷ்ணன். கே மற்றும் பி. கோகுல் தேவ் ஆகியோர் அடங்கிய குழுவினரால் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பானது வெற்றிகரமாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. கண்காணிப்பு கேமராக்களின் மூலம் நிகழ்நேர யானைகளின் நடமாட்டத்தைப் படம்பிடித்துள்ளனர். இதன் மூலம் பயனர்கள் எச்சரிக்கைகள் மற்றும் அறிவிப்புகளைப் பெறுகின்றனர். இப்பல்கலைக்கழகம் தற்போது இந்த புதுமையான தொழில்நுட்பத்தை சந்தைக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
அம்ருதா எலிஃபெண்ட் வாட்ச் சமீபத்தில் நடந்த 2023 GPAI மாநாட்டில் காட்சிப்படுத்தப்பட்டது. இது தொழில் வல்லுநர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களிடமிருந்து குறிப்பிடத்தக்க கவனத்தையும், பாராட்டையும் பெற்றுள்ளது. பல்கலைக்கழகத்தின் முயற்சிகளை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MEITY) அங்கீகரித்தது மட்டுமல்லாமல், “AI in Agriculture” என்னும் கிராமங்களில் மனித மற்றும் யானைகளுக்கிடையிலான மோதலை தவிர்ப்பதற்கான திட்டத்தை குறித்து அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க