• Download mobile app
22 Oct 2024, TuesdayEdition - 3177
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை ஆர்.எஸ்.புரத்தில் முதல்முறையாக டெக்னோ ஸ்போர்ட் ஸ்டோர் துவக்கம்

August 22, 2024 தண்டோரா குழு

உயர்தரமிக்க தொழில்நுட்பத்தில் முன்னணி வகிக்கும் அதிநவீன ஆடைகளையும் விற்பனை செய்ய பெயர் பெற்ற நிறுவனமான டெக்னோஸ்போர்ட், கோவை ஆர்.எஸ்.புரத்தில் முதலாவது ஸ்டோரை துவங்கியுள்ளது.

சில்லறை விற்பனையில் பலப்படுத்தவும், நடப்பு நிதியாண்டில் விரிவாக்க நடவடிக்கையாக 15-16 ஸ்டோர்களை துவக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகவும் இந்த ஸ்டோர் துவக்கப்படுகிறது.
இந்த ஆண்டில், தென்னிந்திய அளவில் கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், தெலுங்கான உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு புதிய ஸ்டோர்கள் பலவிதமாக துவக்கப்படுகின்றன.

பிரபலமான இடங்களில்,அதிக மக்கள் நடமாடும் தெருக்கள்,மால்கள், விளையாட்டு இடங்களில் கடைகளுள் கடைகளாக துவக்கப்படுகினறன.ஆன்லைன் வர்த்தகத்திற்கும், பொதுவான வணிக விற்பனைக்கும் உதவும் வகையில் டெக்னோஸ்போர்ட்ஸ் தங்களது ஸ்டோர்களை அதிகரிக்கிறது. சர்வதேச அளவில் ஒரு பிரபலமான அனைவரும் அறியும் வகையிலான விளையாட்டு உடைகளில் முன்னணி நிறுவனமாக மாற உள்ளது.

டெக்னோஸ்போர்ட் இணை நிறுவனர் சுனில் ஜூஞ்சன்வாலா கூறுகையில்,

“விளையாட்டில் வளர்ச்சி பெற்று வரும் கோவை நகரில், எங்களது முதலாவது ஸ்டோரை துவக்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.இது எங்களது வணிக விரிவாக்கத்தில் ஒரு முக்கிய நிகழ்வாகும். வாடிக்கையாளர்களுக்கு ஒரு நிரந்தரமான பெயரை கொண்டதாகவும், புனிதமிக்க அனுபவத்தை தரவும், நீண்டகால அடிப்படையில் நிலை நிறுத்ததவும் வலுவான அடித்தளமிட்டுள்ளோம்,”என்றார்.

கோவையில் துவக்கப்பட்டுள்ள இந்த கடை, விளையாட்டு வீரர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் மட்டுமின்றி, சுறுசுறுப்பான அனைவருக்குமான உடற்பயிற்சி செய்வோருக்கானதாக இருக்கும். விளையாட்டு வீரர்கள் அனைவருக்குமான ஆடை வகைகள், தொழில்நுட்ப ரீதியான கண்டுபிடிப்புகளுடைய ஆடைகள், பொருட்கள் இதில் இருக்கும். மேலும், வாடிக்கையாளர்கள் எளிதாக அறியும் வகையில், ஒவ்வொரு தயாரிப்பும், அதிநவீன தகவல்களைக் கொண்டதாக இருக்கும் என்றார்.

டெக்னோஸ்போர்ட் இணை நிறுவனர் மற்றும் இயக்குனர் சுமித் சந்தாலியா பேசுகையில்,

எங்களது தனித்துவமிக்க இந்த ஸ்டோர், விற்பனைக்கு உந்துதலாகவும், வளர்ச்சிக்கு உதவுவதாகவும் இருக்கும். இங்கு வாங்கும் அனுபவம், வாடிக்கையாளர்களுக்கு புதுமையான அனுபவத்தை தருவதோடு, இந்த பிராண்ட் மீது நம்பிக்கை அளிப்பதாகவும் இருக்கும்,” என்றார்.

டெக்னோஸ்போர்ட் தலைமை செயல் அதிகாரி புஸ்பென் மெய்தி குறிப்பிடுகையில்,

” வணிக ரீதியாக மட்டுமின்றி, வாடிக்கையாளர்களுக்கு வாழ்வியல் அனுபவங்களை பெறும் விதமாக இந்த தயாரிப்புகள் இருக்கும். நீண்ட கால அடிப்படையில் ஒரு விளையாட்டு வீரருக்கு தேவையான அனுபவங்களை தரும். இதனால், எங்களது பெயர் வலுப்பெறுவதோடு, ஆன்லைன் மற்றும் நேரடி விற்பனையை ஒருங்கிணைக்க முடியும்,” என்றார்.

கோவையில் துவக்கப்பட்டுள்ள இந்த ஸ்டோர், ஆன்லைன் மற்றும் நேரடியாக வாடிக்கையாளர்களுக்கான விற்பனை இடமாகவும் இருக்கும். நடப்பு நிதியாண்டில், மேற்கு, வடஇந்தியாவில் போட்டியிட இது வலுவான இடத்தை தரும். வாடிக்கையாளர்களுடன் நல் உறவை மேற்கொள்ள தொடர்ந்து இந்த ஸ்டோர் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தவும் திட்டமிட்டுள்ளது.

இந்த ஸ்டோர், கோவை, ஆர்.எஸ்.பரத்தில் உள்ள ராஜஸ்தானி சங் பவனுக்கு எதிராக தரைத்தளத்தில் 25ஏ1 என்ற முகவரியில் அமைந்துள்ளது. மேலும் விபரங்களுக்கு டெக்னோஸ்போர்ட் இணையத்தளத்தை பார்வையிடவும்.

மேலும் படிக்க