August 26, 2024 தண்டோரா குழு
கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மத்திப்பாளையத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஶ்ரீ மகா ஸ்வர்ண வாராஹி அம்மன் திருக்கோவிலின் மூன்றாம் ஆண்டு விழா நடைபெற்றது. மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில் கணபதி ஹோமம், பால்குடம் எடுத்தல், முளைப்பயிர் ஏற்படுத்தல், கும்மிப்பாட்டு நடனம்,அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதன,சமத்துவ அன்னதானம் என வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் கோவை வடக்கு மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு தலைவர் ஆரோக்கிய ஜான் மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி அவர்களின் ஆலோசனைப்படி, ஜாதி மத பேதமின்றி பல்வேறு கோவில்களுக்கு திருப்பணிகளை செய்து வருகின்றார். அதன் தொடர்ச்சியாக மத்திபாளையம் அருள்மிகு ஶ்ரீ மகா சொர்ண வாராஹி அம்மன் கோவில் 3-வது ஆண்டு விழாவில் சுமார் 1000க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அறுசுவை உணவான முழு சைவ உணவு அரிசி சாதம், கதம்பம் சாம்பார், கதம்ப பொரியல்,வந்த குளம்பு,ரசம்,காய்கறி கூட்டு, அப்பளம், வடை,கோதுமை பாயாசம் என வெகு விமர்சையாக சமத்துவ அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த சமத்துவ அன்னதானத்தை பெண் பேரூராட்சி தலைவர்கள் திமுக மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி மனைவி,தொண்டாமுத்தூர் பேரூராட்சி தலைவர் கமலம் ரவி மற்றும் தென்கரை பேரூராட்சி தலைவர் மகாலட்சுமி துணைத்தலைவர் மற்றும் நகரக் கழக செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
மேலும் கூடுதலாக கிட்டத்தட்ட நான்கு நேரம் கோயிலில் திருப்பணி ஆற்றும் பக்தர்களுக்கு மற்றும் கோயில் நிர்வாகிகளுக்கு காலை மற்றும் மாலை சிற்றுண்டியை கோவை வடக்கு மாவட்ட சிறுபான்மை நல பிரிவு தலைவர் ஆரோக்கிய ஜான் வழங்கினார்.
கேட்கும் பக்தர்களுக்கு கேட்ட வரங்களை கொடுக்கும் அருள்மிகு ஶ்ரீ மகா ஸ்வர்ண வாராஹி அம்மனின் அற்புதங்களை சொல்லளவில் சொல்ல இயலாது. பிள்ளை வரம்,தொழில் தடை, திருமணத்தடை கல்வித் தடை போன்ற எந்த வேண்டுதல் வைத்தாலும் அதை உடனடியாக அருள்மிகு ஶ்ரீ மகா ஸ்வர்ண வாராஹி அம்மன் நிறைவேற்றித் தருவதால் இத்திருகோவிலில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர் என கூறப்படுகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களை கோவிலின் அறங்காவலரும் பூஜாரியமான ராஜேந்திரன் சுவாமிகள் அனைவரையும் அன்பாக வரவேற்று அவர்களது குறைகளை கேட்டு அம்மன் அருளுடன் அவர்களது குறைகளுக்கு பரிகாரங்களை செய்து தருவதாக பக்தர்கள் கூறுகின்றனர்.
மேலும் மாதாமாதம் வரும் பஞ்சமி, அமாவாசை, பௌர்ணமி,மற்றும் அஷ்டமி ஆகிய தினங்களில் சிறப்பு பூஜை, ஆராதனை மற்றும் அன்னதானம் நடைபெறுகிறது.
இத்திருக்கோயில் வரலாறு:-
தீவிர அம்மன் பக்தரான ராஜேந்திர சுவாமிகள் கனவில் மத்தி பாளையத்தில் கோயில் அமைக்க வேண்டும் என்று அருள்மிகு ஶ்ரீ மகா ஸ்வர்ண வாராஹி அம்மனே சொன்னதாகவும், அம்மனின் உத்தரவை ஏற்று உடனடியாக இங்கு திருக்கோவில் கட்டப்பட்டதாகவும் இராஜேந்திரன் சுவாமிகள் கூறுகினீறார். ஆரம்பத்தில் சிறிய அளவில் உருவான இத்திருக்கோயில் பக்தர்கள் ஈ பிராத்தனைகள் நிறைவேற அவர்களது ஆதரவுடன் நாளுக்கு நாள் பக்தர்கள் வருகை அதிகரித்து வருவதாக கூறப்படுகின்றது. தற்போது மூன்று ஆண்டு விழா வெகு சிறப்பாக கணபதி ஹோமம், பால்குடம் எடுத்தல், முளைப்பயிர் ஏற்படுத்தல், கும்மிப்பாட்டு நடனம்,அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதன, சமத்துவ அன்னதானம் என வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது என இராஜேந்திரன் சுவாமிகள் கூறுகின்றார்.
மேலும் இத்திருக்கோலில் விநாயகர், பதஞ்சலி முனிவர், எல்லை ஜக்கம்மா,ராகு,கேது,சப்த கன்னிமார், தடிக்காரபோத்தி,சிவன், நந்தீஸ்வரர், உண்ணாமலை அம்மன்,அகத்தியர், முருகன்,சிங்க வாகன பீடம், ஸ்வர்ண காலபைரவர், பேச்சியம்மன்,மயானகாளி, சுடலைமாடன் ஆகிய கடவுள்களுக்கு சிறப்பு பூஜை நடைபெறுகின்றது.
ஸ்வர்ண காலபைரவர் சிறப்பு பூஜை,
ஒவ்வொரு மாதமும் வளர்பிறை,தேய்பிறை அஷ்டமி தினங்களில் காலபைவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்,ஆராதனை செய்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
பௌர்ணமி சிறப்பு பூஜை:-
ஒவ்வொரு மாதமும் வருகின்ற பௌர்ணமி தினத்தில் மாலை 3.30 மணி முதல் 5 மணிக்குள் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்,ஆராதனை, அலங்காரம்,சிறப்பு பூஜை செய்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது வருகின்றது.
கிருத்திகை மற்றும் சஷ்டி தின சிறப்பு பூஜை:-
ஒவ்வொரு மாதமும் கிருத்திகை மற்றும் சஷ்டி தினங்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்,ஆராதனை, அலங்காரம்,சிறப்பு பூஜை செய்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது வருகின்றது.மேலும் தைப்பூசம், பங்குனி உத்திரம் தினங்களிலும் சிறப்பூஜை நடைபெறுகிறது.
ராகு கேது பெயர்ச்சி தினங்களில் சிறப்பு பூஜை:-
ஒவ்வொரு ராகு,கேது பெயர்ச்சி காலங்களில் பக்தர்களின் நலன் கருதி ராகு கேது பெயர்ச்சி காலங்களில் சிறப்பு யாகசாலை பூஜை நடைபெறுவதுடன் சிறப்பு அபிஷேகம்,ஆராதனை, அலங்காரம்,சிறப்பு பூஜை செய்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது வருகின்றது.
விநாயகர் சதுர்த்தி விழா
இத்திருக்கோயில் விநாயகர் சதூர்த்தி அன்று சிறப்பு அபிஷேகம்,ஆராதனை, அலங்காரம்,சிறப்பு பூஜை செய்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது வருகின்றது.
அம்மாவாசை தினங்களில்
அம்மாவாசனை தினங்களில் அருள்மிகு ஶ்ரீ மகா ஸ்வர்ண வாராஹி அம்மன்,எல்லை ஜக்கம்மா, மயானகாளி, சுடலைமாடன் ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம்,ஆராதனை, அலங்காரம்,சிறப்பு பூஜை செய்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது வருகின்றது.மேலும் அந்த தினங்களில் இராஜேந்திரன் சுவாமிகள் அருள் வாக்கு கூறிவருகின்றார்.
இந்த மூன்றாம் ஆண்டு திருவிழாவில் சிறப்பு யாகசாலை பூஜையை அஸ்வின் சுவாமிகள்,காளி உபாசகர் ஜோதிடர் ஆராய்ச்சியாளர் சிவகுருநாதன் ஆகியோர் முன் நின்று செய்ததாக இராஜேந்திரன் சுவாமிகள் கூறினார்.மேலும் இராஜபாளையம் ஆத்ம ஞான குருகுலம் பிரம்ம ஶ்ரீ ஆத்ம யோகி ஆறுமுகனந்தா சுவாமிகள்,மருதமலை வாராஹி உபாசகர் சுப்ரமணி அய்யா,மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் துடியலூர் நட்சத்திரம் ஜோதிடர் முனைவர் பால்முருகன், தர்மசாஸ்தா ஜோதிட வித்தியாலயா கல்வி மையத்தின் நிறுவனத்தலைவர் சாஸ்தா மணிகண்ட ராஜ், மகரிஷி ஜோதிட ஆராய்ச்சி அறிவகம் கல்வி மையத்தின் நிறுவனத்தலைவர் முகுந்தன் முரளி ஆகியோர் கலந்து கொண்டு அம்மன் திருப்பணியை மோற்கொண்டனர்.
” தேடி வரும் பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி வரும் அருள்மிகு ஶ்ரீ மகா ஸ்வர்ண வாராஹி அம்மன்”கோவில் மூன்றாம் ஆண்டு விழாவை ஆன் லைன் அஸ்ர்டோ ஆன்லைன் டிவியில் அதன் நிறுவனத்தலைவர் முத்துப்பாண்டி ஒளிபரப்பு செய்ததாக கூறினார்.