August 26, 2024 தண்டோரா குழு
கோவை பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி மருத்துவமனையில் பி.எஸ்.ஜி
ரோபோகான் 2024 எனும் தலைப்பில் கோவையில் முதல் முறையாக,ரோபோடிக் அறுவை சிகிச்சை குறித்த பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கு 2 நாட்கள் பி.எஸ்.ஜி மருத்துவமனை அரங்கத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பி.எஸ்.ஜி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ஜே.எஸ் புவனேஸ்வரன்,பி.எஸ்.ஜி புற்றுநோய் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் டி. பாலாஜி, பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் டி.எம். சுபாராவ்,குழந்தைகள் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பாவை அருணாச்சலம், புற்று நோய்கள் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கே.எஸ் ராஜ்குமார், இரைப்பை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பாலு குப்புசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கருத்தரங்கில் இந்தியா முழுவதும் இருந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்றனர்.பயிலரங்கில் 40 மருத்துவர்களுக்கு ரோபோடிக் அறுவை சிகிச்சை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இரண்டாவது நாள் நடைபெற்ற கருத்தரங்கில்,சென்னை காவேரி மருத்துவமனை டாக்டர் சுஜய் சுசிகர்,டாக்டர் பினக் தாஸ் குப்தா,பெங்களூரு அஸ்டர் மருத்துவமனை டாக்டர் அஸ்வின்,புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை டாக்டர் சக்திவேல், ஸ்வாகத் மருத்துவமனை டாக்டர் சுபாஷ் கண்ணா,ஜெம் மருத்துவமனை டாக்டர் சி. பழனிவேலு, அப்பல்லோ மருத்துவமனை டாக்டர் பி.வெங்கட் உள்ளிட்ட பலர் ரோபோடிக் குறித்த பல்வேறு கருத்துகளை எடுத்துரைத்தனர்.
பயிலரங்கு மற்றும் கருத்தரங்கில் பிஎஸ்ஜி மருத்துவமனை டாக்டர்கள் ராஜேஷ்குமார், விஷ்ணுவர்தன், தேவி பாலசுப்ரமணியம், அருள் முருகன், சுருதி நஞ்சுண்டப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.