• Download mobile app
22 Oct 2024, TuesdayEdition - 3177
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் செயல்படும் ZF விண்டு பவர் நிறுவனம் ’50 GW கியர்பாக்ஸ் திறனுள்ள மொத்த உற்பத்தி’ எனும் புதிய மைல்கல்லை எட்டி சாதனை!

August 27, 2024 தண்டோரா குழு

கோயம்புத்தூருக்காக 50 GW காற்றாலைகளுக்கான கியர்பாக்ஸ்கள் என்ற மைல்கல் சாதனையுடன் காற்றாலைக்கான கியர்பாக்ஸ்;தொழில்நுட்பத்தில் தனது உலகளாவிய தலைமைத்துவ நிலையை ZF மேலும் வலுப்படுத்துகிறது.

தொழில்நுட்பத்தால் முன்னெடுக்கப்படும் உற்பத்தி செயல்பாட்டில் உலகளவில் முதன்மை வகிக்கும் மற்றும் உலகளாவிய காற்றாலை டர்பைன் கியர்பாக்ஸ் தொழில்துறையில் ஒரு சேவை கூட்டாளியாகவும் திகழும் ZF விண்டு பவர், இந்திய சந்தைக்கு ஒரு முக்கிய மைல்கல் சாதனை நிகழ்த்தப்பட்டிருப்பதை அறிவித்திருக்கிறது;இந்தியாவின் கோயம்புத்தூரில் அமைந்துள்ள அதன் மிக நவீன உற்பத்தி ஆலையில், 50 GW கியர்பாக்ஸ் திறனுள்ள மொத்த உற்பத்தி என்ற மைல்கல் சாதனை படைத்துள்ளது.

50 GW மைல்கல் என்பது, இந்தியாவின் காற்றாலை சந்தையில் ZF – ன் முன்கூட்டிய நுழைவிற்கும் மற்றும் தொடர்ச்சியான பொறுப்புறுதிக்கும் ஒரு சாட்சியமாக திகழ்கிறது. சீனாவைத் தவிர்த்துப் பார்கையில்,உலகில் காற்றாலைக்கான கியர்பாக்ஸ் உற்பத்திக்கு மிகப்பெரிய ஆலையாக கோயம்புத்தூரில் நிறுவப்பட்டுள்ள ZF விண்டு பவர் தொழிலகம் இருக்கிறது.ஒரு முக்கியமான ஏற்றுமதி மையத்தை நிறுவியிருப்பது மற்றும் உள்ளூர் திறனம்சங்களில் தொடர்ந்து முதலீடு செய்வதன் வழியாக இந்தியாவின் காற்றாலை மின்சக்தி செயல்தளத்தை மேம்படுத்தி உருவாக்குவதில் ZF ஒரு முக்கிய பங்காற்றுகிறது.

காற்றாலை மின்சக்தி சந்தையில் எதிர்பார்க்கப்படும் வளர்ச்சி தேவையை எதிர்கொள்வதற்கு ஒரு ஆண்டுக்கு 9 GW ஆக இருக்கின்ற தனது உற்பத்தி திறனை 12 GW ஆக விரிவாக்கும் நோக்கத்திற்காக கோயம்புத்தூரிலுள்ள ZF விண்டு பவர் தொழிலகத்தில் நீண்டகால உத்தி அடிப்படையில், முக்கிய முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன.இவ்விரிவாக்கத்தோடு சேர்த்து 13 MW பரிசோதனைக்கான ரிக் இங்கு நிறுவப்பட்டிருப்பது, உருவாக்கம் மற்றும் செயல்திறனை உறுதி செய்வதில் ஒரு சிறந்த பார்ட்னராக ZF – ன் அந்தஸ்தை மேலும் வலுப்படுத்தியிருக்கிறது.

ZF குழுமத்தின் நிர்வாக குழுவின் உறுப்பினரான பீட்டர் லைய்யர் இது குறித்து கூறும்போது,

“மேக் இன் இந்தியா திட்டத்திற் கீழ், இந்தியாவிற்கும் மற்றும் உலகிற்கும் அதாவது, உள்நாட்டைச் சேர்ந்த மற்றும் உலகளாவிய வாடிக்கையாளர்கள் ஆகிய இருதரப்பினருக்கும் கியர்பாக்ஸ்களை இத்தொழிலகம் வழங்கி வருவதால், இந்தியாவில் ரு முன்னணி கியர்பாக்ஸ் சப்ளையராக ZF விண்டு பவர் சிறப்பாக செயலாற்றி வருகிறது. இந்த உற்பத்தி வசதிகளை விரிவாக்குவதில் ZF குழுமம் செய்து வரும் முதலீடுகள், இப்பிராந்தியத்தின் வளர்ச்சிக்கான சாத்தியத்திறனுக்கும் மற்றும் இதன் நீண்டகால இலக்குகளுக்குமான ஒரு வலுவான சான்றாகத் திகழ்கிறது.

நிலைப்புத்தன்மைக்கான குறிக்கோள்களில் நாங்கள் தொடர்ந்து பொறுப்புறுதியுடன் இயங்குகிறோம். 2030-ம் ஆண்டுக்குள் இந்நாட்டின் காற்றாலை மின்சார உற்பத்தி திறனை இரண்டு மடங்காக உயர்த்துவது என்ற இந்தியாவின் மிகப்பெரிய குறிக்கோளை அடைவதற்கு விரிவாக்கப்பட்ட எமது உற்பத்தி வசதிகளின் காரணமாக கணிசமான பங்களிப்பை வழங்கக்கூடிய நிலையில் நாங்கள் இருக்கிறோம்.”

இந்தியாவின் ZF குழுமத்தின் தலைவர் ஆகாஷ் பாஸ்ஸி கூறுகையில்,

இந்த மைல்கல்லை வெற்றிகரமாக இயக்கியிருக்கும் இந்தியாவின் ஒரே தொழிலகமாக இருப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். நிலைப்புத்தன்மை மீதான எமது முக்கிய கூர்நோக்கமும் மற்றும் தரம், புத்தாக்கம் மற்றும் வாடிக்கையாளர் திருப்தி என்ற ZF – ன் முதன்மை பண்பியல்புகளும் ஒருங்கிணைந்து, இந்திய காற்றாலைக்கான கியர் பாக்ஸ் சந்தையில் தலைமைத்துவ நிலையை நாங்கள் தொடர்ந்து பராமரிப்பதற்கு எங்களை திறனுள்ளவர்களாக ஆக்கியிருக்கிறது. எமது தொழில்நுட்ப மற்றும் உற்பத்திதிறன் விரிவாக்க நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இந்த ஆண்டு தொடக்கத்தில் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது ரூ.750 கோடியை முதலீடு செய்யும் பொறுப்புறுதியை நாங்கள் ஏற்கனவே வழங்கியிருக்கிறோம். திட்டமிடப்பட்டுள்ள விரிவாக்கமானது, சந்தையில் நிலவும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொள்வது மற்றும் வாடிக்கையாளர் தேவைகளை திருப்திகரமாக பூர்த்தி செய்வது மீது கூர்நோக்கம் கொண்டிருக்கிறது.” என்று கூறினார்.

“எமது பார்ட்னரின் அமைவிடத்திற்கு முடிந்தவரை நெருக்கமாக மிக அருகில் எமது உள்ளூர் உற்பத்தி அமைவதற்கு நாங்கள் தீவிரமாக முயற்சிக்கிறோம். மேம்பட்ட மற்றும் நிலைப்புத்தன்மையுள்ள லாஜிஸ்டிக் செயல்பாடுகள், எமது உலகளாவிய உற்பத்தி பாதச்சுவட்டை பெரிதும் அதிகரிக்கும் அதே வேளையில், சுற்றுச்சூழல் பாதிப்பை பெரிதும் குறைக்கவும் உதவுகிறது. துடிப்பான வாடிக்கையாளர் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு உள்நாட்டு மற்றும் உலகளாவிய உற்பத்தியில் நெகிழ்வுத்தன்மை மீதான எமது பொறுப்புறுதியாக ZF விண்டு பவர் தொழிலகத்தில் எமது முதலீடு திகழ்கிறது. இந்த வழிமுறை மூலம் எமது பார்ட்னர்களுடன் ஒருங்கிணைந்து, நிலைப்புத்தன்மையுள்ள எதிர்காலத்தை நாங்கள் சாத்தியமாக்குகிறோம்.” என ZF விண்டு பவர் – ன் தலைமை செயல் அதிகாரி திரு. ஃபெலிக்ஸ் ஹென்செலர் கூறியுள்ளார்.

கோயம்புத்தூர், ZF விண்டு பவர் தொழிலகத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான தீபக் பொஹெகர் கூறியதாவது:

“1200000 சதுரமீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் அமைந்திருக்கும் எமது தொழிலக வளாகம், மிக நவீன உற்பத்தி மையமாகும். உற்பத்தியுடன் சேர்த்து, இங்கு அமைந்துள்ள ஆராய்ச்சி மற்றும் உருவாக்கத்திற்கான மையம், உலகளாவிய தீர்வுகளுக்காக மிக தீவிரமாக செயலாற்றி வருகிறது. ZF விண்டு பவர் குழுமத்திற்கு முக்கியமான சேவை மையங்களுள் ஒன்றாகவும் இத்தொழிலகம் செயல்படுகிறது. மாறுகின்ற மற்றும் வளர்ச்சியடைந்து வருகின்ற உள்நாட்டைச் சேர்ந்த மற்றும் உலகளாவிய வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்துக் கொள்ளும் இந்த தொழிலகத்தின் திறன், அதன் திறமையான பணியாளர்கள் குழுவின் அர்ப்பணிப்பால் இதன் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.”

ZF – ன் விரிவான நிலைப்புத்தன்மை இலக்குகள் மற்றும் 2040-ம் ஆண்டுக்குள் கார்பன் நடுநிலைமை என்ற குறிக்கோள் மீதான பொறுப்புறுதிக்கு இத்தொழிலகத்தின் விரிவாக்கப் பணிகள் இணக்கமானதாக இருக்கின்றன. சுற்றுச்சூழல் மீதான பாதிப்பை குறைக்கவும் மற்றும் பசுமையான எதிர்காலத்திற்கு பங்களிப்பை வழங்கவும் மிக நவீன தொழில்நுட்பங்களையும் மற்றும் செயல்முறைகளையும் பயன்படுத்துகின்ற சிறந்த தொழிலகமாக கோயம்புத்தூர் ஆலை இயங்கி வருகிறது.

மேலும் படிக்க