January 24, 2017
தண்டோரா குழு
68-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழக காவல் துறையில் சிறப்பாகப் பணியாற்றிய காவலர்கள் மற்றும் தீயணைப்புத் துறையைச் சேர்ந்தவர்களுக்குத் தமிழகத்தில் “குடியரசுத் தலைவர் விருது” வழங்கப்பட உள்ளது.
சிறப்பாகப் பணியாற்றிய காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் குடியரசுத் தலைவர் விருது வழங்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில் சிறப்பாக செயல்பட்ட தமிழக காவலர்கள் தஞ்சை சிறப்புப் பிரிவு, உதவி ஆய்வாளர் வீராசாமி, திருச்சி பொன்மலை உதவி ஆணையர் மாணிக்கவேல், திருவொற்றியூர் உதவி ஆணையர் குமார், கிருஷ்ணகிரி காவல்துறை கண்காணிப்பாளர் கண்ணன், தூத்துக்குடி ஊழல் தடுப்பு ஆய்வாளர் ரகுபதி மற்றும் எழும்பூர் சி.பி.- சி.ஐ.டி. அதிகாரி அருள்தாஸ் ஆகியோர் உட்பட 22 பேருக்கு குடியரசுத் தலைவர் விருது வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
குடியரசு தினத்தன்று தில்லியில் நடைபெற உள்ள விழாவின்போது இந்த விருது வழங்கப்படுகிறது.