• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சக்தி லாக்கர்சின் புதுப்பிக்கப்பட்ட மாபெரும் நஞ்சுண்டாபுரம் கிளை, விரிவாக்கத்துடன் துவக்கம்

August 30, 2024 தண்டோரா குழு

சக்தி லாக்கர்சின் புதுப்பிக்கப்பட்ட மாபெரும் நஞ்சுண்டாபுரம் கிளை,விரிவாக்கத்துடன் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

புதிய கிளையை சக்தி பைனான்ஸ் லிமிடெட் துணை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் எம்.பாலசுப்ரமணியம் துவக்கி வைத்து பேசுகையில்,

“வாடிக்கையாளர்கள் சேவையை மேம்படுத்தவும்,வேகமாக வளர்ச்சி பெற்று வரும் வாடிக்கையாளரின் தேவையை நிறைவேற்றவும் இக்கிளை வசதியாக இருக்கும். தனி நபர்களின் வருவாய் உயர்வு, தேசிய அளவில் லாக்கர் வசதியின் தேவையை அதிகரித்துள்ளது.வங்கிகள் லாக்கர் சேவையை அளித்து வந்தபோதிலும் அதற்கான தேவையில் ஒரு பகுதியை மட்டுமே பூர்த்தி செய்ய முடிகிறது. இந்த இடைவெளியை குறைத்து வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையை அளிக்கும் வாய்ப்பை சக்தி லாக்கர்ஸ் பெற்றுள்ளது.

புதிய லாக்கர் பிரிவை துவக்கி வைத்து சக்தி ஃபைனான்ஸ் பைனான்சியல் சர்வீஸ் லிமிடெட் நிறுவனத்தின் செயல் இயக்குனர் ஸ்ருதி பாலசுப்ரமணியம் பேசுகையில்,

“கடந்த சில ஆண்டுகளாக பொதுமக்கள் அதிக மதிப்புமிக்க பொருட்கள் மற்றும் தங்க நகைகளை வாங்குகின்றனர். இவற்றை பாதுகாக்க சரியான தீர்வுகளையும், எளிதாக கையாளவும் சிறப்பான இடங்களை தேடுகின்றனர். இந்த தேவையை நிறைவு செய்ய எங்கள் நிறுவனம் விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சென்னை, பெங்களுரு மற்றும் தமிழ்நாட்டில் மாவட்ட தலைநகரங்களில் லாக்கர் விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். கோவை ரேஸ்கோர்சில் சுவாஸ்யா என்ற அதிக வசதிகள் கொண்ட பீரிமியம் லாக்கர் சேவையை அறிமுகம் செய்துள்ளோம். தேவையை பொறுத்து இந்த வசதிகளை பிற நகரங்களுக்கும் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளோம்,” என்றார்.

கம்பெனியின் முழு நேர இயக்குனர் நைனன் வர்கீஸ்,வாடிக்கையாளர்களை மையமாக கொண்ட அம்சங்களுடன் செயல்பட்டு வரும் சக்தி லாக்கர்ஸ், அளவற்ற முறை பயன்பாடு, வசதியான இயங்கும் நேரம்,போன்ற வசதிகளை கொண்டுள்ளது.தமிழ்நாடு முழுவதும் தற்போது  25 லாக்கர் கிளைகளை கொண்டுள்ளது. பாதுகாப்புக்கான அதிநவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டுள்ளது. திருட்டு, தீ விபத்துக்கான சங்கொலி, முக அடையாள வசதிகள், ஊடுறுவல் கண்டுபிடிப்புகள், 24 x 7 காவல் போன்ற நவீன வசதிகளை கொண்டுள்ளது. மேலும் முதலீடு செய்ய விரும்புவர்களுக்கு நிறுவன டெபாசிட்கள், மியுச்சுவல் பண்ட் போன்ற சேவைகளையும் அளிக்கிறது,” என்றார்.

துவக்க விழா நிகழ்ச்சியில் பல்வேறு முக்கிய பிரமுகர்கள், வாடிக்கையாளர்கள் பங்கேற்றனர்.

மேலும் படிக்க