• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

‘ஒழுக்கமே சுதந்திரம்’ எனும் மையக்கருத்தில் பரப்புரையை முன்னெடுத்த ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணி

August 30, 2024 தண்டோரா குழு

தற்போது நாட்டில் நிலவும் மது, போதை, ஆபாசம், தவறான உறவுகள் எனப் பெருகும் ஒழுக்கச் சீர்கேடுகளுக்கு எதிராக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணி அகில இந்திய அளவில் 2024 செப்டம்பர் மாதம் ‘ஒழுக்கமே சுதந்திரம்’ எனும் மையக்கருத்தில் பரப்புரையை முன்னெடுத்துள்ளது.

இப்பிரச்சார இயக்கத்தை முன்னிட்டு கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இச்சந்திப்பில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மாநகர மகளிர் அணி தலைவர் ஜஹீனா அஹமது , மகளிர் அணி செயலாளர் ஷர்மிளா அப்துல்லாஹ் , கோவை தெற்கு மண்டல மகளிர் அணி தலைவர் சலீனா பாரி , மகளிர் அணிச் செயலாளர் பெனாசிர் சமது , கோவை வடக்கு மண்டல மகளிர் அணி தலைவர் கமருன்னிஷா கலந்து கொண்டனர்.

இப்பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மாநகர மகளிர் அணி தலைவர் ஜஹீனா அஹமது பேசியதாவது,

மது,போதைக் கலாச்சாரம் இன்று பெருகிக் கொண்டிருக்கிறது.குடி நோயாளிகளின் நாடாக இந்தியா மாறி வருகிறது. பள்ளி மாணவர்கள் தொடங்கி ஆண், பெண் வேறுபாடின்றி மது அருந்துகின்றனர். இதனால் தீமைகள் பெருகிவிட்டன. நோய்கள் அதிகரித்துவிட்டன. விபத்து, கொலை, கொள்ளை, பாலியல் வன்புணர்வு என அனைத்துத் தீமைகளுக்கும் தாயாக மது இருக்கிறது. மதுவை ஒழிக்க வேண்டிய அரசாங்கமே டாஸ்மாக் கடைகளை நடத்துவது வேதனையளிக்கிறது.

போதை நாட்டையே நாசப்படுத்திவிடும் என்பதால் போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னெடுத்துள்ளதை நாங்கள் வரவேற்கிறோம். ஆகஸ்ட் 11 ஆம் நாள் போதைக்கு எதிரான நாளாக அறிவித்து மாணவர்கள், பள்ளி, கல்லூரிகளில் விழிப்பு உணர்வை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தி வருவது பாராட்டுக்குரிய முயற்சி. அதே வேளையில் மதுவை தடை செய்யாமல் போதை இல்லா பாதை சாத்தியம் இல்லை என்பதை உணர்ந்து தமிழ்நாடு அரசு பூரண மதுவிலக்கைக் கொண்டுவர வேண்டும்.

இன்று பெண்கள் வாழத் தகுதியற்ற நாடாக இந்தியா மாறி வருகிறது. இந்தியாவின் மகள்கள் தொடர்ந்து சீரழிக்கப்படுகிறார்கள். டெல்லியில் 2012 ஆம் ஆண்டு, ஓடும் பேருந்தில் 22 வயது மருத்துவ மாணவி கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதையடுத்து பாலியல் வன்முறைக்கு எதிரான சட்டங்கள் இந்தியாவில் கடுமையாக்கப்பட்டன. ஆனாலும் பாலியல் வன்புணர்வு வழக்குகள் பதிவு செய்யப்படுவது அதிகரித்துள்ளது. இந்தியாவில் தினமும் 90 பாலியல் வன்புணர்வுகள் நிகழ்வதாகவும், ஆண்டுதோறும் 32,000 பாலியல் வன்புணர்வு வழக்குகள் பதிவாவதாக ஒன்றிய அரசின் NCRB தெரிவிக்கிறது. ஹத்ராஸ் பட்டியலினப் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக் கொலை, உன்னாவில் சிறுமி பாலியல் வன்கொடுமைக் கொலை, கதுவாவில் 8 வயது ஆசிஃபா கூட்டுப் பாலியல் வன்கொடுமைக் கொலை, இப்போது கொல்கத்தா பயிற்சி மருத்துவர் பாலியல் வன்புணர்வுப் படுகொலை என இக்கொடூரங்கள் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டிருகின்றன.
அதேநேரத்தில் குற்றவாளிகள் தப்பிவிடுவதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி காணல் நீராகவே இருக்கிறது. சட்டங்கள் கடுமையாக்கப்பட்டாலும், சிந்தனை மாற்றமும், இறையச்சமுமே பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும். தன்பாலின உறவு, கள்ள உறவுகள், திருமணம் ஆகாமலேயே சேர்ந்து வாழ்தல் போன்ற இழி செயல்கள் இன்று பெருகி வருகின்றன. இது வருங்காலத் தலைமுறையயே நாசப்படுத்திவிடும். இந்தக் கேடுகெட்ட செயல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். ஒழுக்க மாண்புள்ள சமுதாயத்தை அனைவரும் ஒன்றிணைந்து உருவாக்க வேண்டும்.
மது, போதை, ஆபாசம், ஒழுக்கக் கேடுகளுக்கு எதிராக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணி முன்னெடுத்திருக்கும் இந்தப் பரப்புரையை முன்னிட்டு கோவையில் பல்வேறு நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.

அனைத்து சமயத் தலைவர்கள் ஒன்றினையும் கருத்தரங்கங்கள், பொதுக்கூட்டங்கள், தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்கள்,
நோட்டீஸ் விநியோகம். இல்லங்களில் சந்திப்புகள், அரங்கக் கூட்டங்கள், தனி நபர் கவுன்சிலிங் வழங்குதல், மாபெரும் கண்காட்சிகள், பேரணி, மனிதச்சங்கிலி சமூக வலைதள பிரச்சாரம் பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்வுகள்,
ஆசிரியர்களுக்கான கலந்துரையாடல்கள்,
உறுதி மொழி ஏற்பு நிகழ்வுகள்,போன்ற பல்வேறு நிகழ்வுகள் மூலம் கோவையில் 15 லட்சம் மக்களை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இது முஸ்லிம் பெண்கள் முன்னெடுக்கும் பரப்புரைதானே தவிர இது முஸ்லிம்களுக்கான, பெண்களுக்கான பரப்புரை அல்ல. ஒட்டு மொத்த மனித குலத்திற்கும் நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம். அனைவரும் இந்த நல்ல நோக்கத்திற்காக ஒன்றிணைவோம். ஒழுக்க மாண்புள்ள சமுதாயத்தை உருவாக்குவோம் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து ‘ஒழுக்கமே சுதந்திரம்’ பிரச்சார இயக்கத்தின் இலச்சினை (LOGO) வெளியிடப்பட்டது. மேலும் Dr. KVS ஹபீப் முஹம்மது அவர்கள் எழுதிய ‘ஒழுக்கமே சுதந்திரம்’ எனும் தலைப்பிலான புத்தகம் வெளியிடப்பட்டது.

மேலும் படிக்க