• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கொடிசியா அருகில் குறைந்த விலையில் “டெல்டா சிட்டி” அடுக்குமாடி குடியிருப்பு திட்டம் திட்டம் துவக்கம்

September 5, 2024 தண்டோரா குழு

கோயம்புத்தூரின் பிரபல ரியல் எஸ்டேட் டெவலப்மென்ட் நிறுவனமான டவுன் அண்ட் சிட்டி டெவலப்பர்ஸ் நிறுவனம் (TNCD). கொடிசியா – தண்ணீர் பந்தல் சாலைக்கு அருகில் ‘டெல்டா சிட்டி’ எனும் அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தை இன்று துவக்கம் செய்தது.

இந்த திட்டத்தை TNCD நிறுவனத்தின் இணை நிறுவனர் சஞ்சனா விஜயகுமார், மூத்த துணைத் தலைவர் சுரேஷ் குமார், துணை பொது மேலாளர் – ப்ராஜெக்ட் ரத்தின மூர்த்தி, மார்க்கெட்டிங் துறை தலைவர் ஜோஷ்வா ஆகியோர் வியாழக்கிழமை தொடங்கி வைத்தனர்.

இந்த அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தின் கீழ் 1 BHK (படுக்கையறை, ஹால், சமையலறை) ரூ. 30.99 லட்சத்துக்கும், 2 BHK ரூ.54 லட்சத்துக்கும் மற்றும் 3 BHK ரூ.74 லட்சத்துக்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்திற்கும் EMI வசதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த குடியிருப்பு வளாகத்தில் வாஸ்து, கழிவுநீர் மேலாண்மை, மின்சார வாகன சார்ஜிங் வசதி, 24 மணிநேர CCTV கண்காணிப்பு, ஸ்மார்ட் ஹோம் அம்சங்கள், திறந்த உடற்பயிற்சி கூடம் போன்ற 15க்கும் அதிகமான சிறப்பு வசதிகள் உள்ளடங்கும் எனவும் TNCD நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த அடுக்குமாடி குடியிருப்பின் துவக்கத்திற்கு பின்னர் செய்தியாளர் சந்திப்பில் சுரேஷ் குமார் கூறியதாவது:-

எங்கள் டெல்டா சிட்டி திட்டத்திற்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து மிக பெரும் ஆதரவும் வரவேற்பும் கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தில் மொத்தம் 80 பிளாட்டுகள் உள்ளன. இவற்றில் 70%க்கும் அதிகமான பிளாட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. டெல்டா சிட்டியில் இருந்து கோவையின் முக்கிய பகுதிகளான அவிநாசி ரோடு, சத்தி ரோடு (தண்ணீர் பந்தல் வழியாக), டைடல் பார்க், சரவணம்பட்டி ஆகிய பகுதிகளுக்கு விரைவில் செல்லமுடியும், என கூறினார். மேலும் அவர் தொடர்ந்து பேசுகையில், இந்த அடுக்குமாடி குடியிருப்பு ப்ரீகாஸ்ட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட முதல் அடுக்குமாடி குடியிருப்பு என்று தெரிவித்தார்.

ப்ரீகாஸ்ட் தொழில்நுட்பத்தைப் பற்றி ரத்தின மூர்த்தி கூறுகையில்:

ப்ரீகேஸ்ட் என்பது குடியிருப்புகளை கட்ட தேவையான சுவர் உள்ளிட்ட அமைப்புகளை தனியே ஒரு இடத்தில் உருவாக்கி குடியிருப்பு வளாகம் உருவாகும் இடத்தில் அதை ஒருங்கிணைப்பது ஆகும். டெல்டா சிட்டியின் பிளாட்டுகளுக்கு தேவையான பிரீகாஸ்ட் கட்டமைப்புகளை உருவாக்க M 40 தர கான்கிரீட்டைப் பயன்படுத்தியுள்ளோம் . இங்கு உள்ள ஒரு சுவரின் தடிமன் குறைந்தபட்சம் 160 மிமீ இருக்கும். இப்படி உருவாக்கப்பட்டுள்ள சுவரில் கசிவு அல்லது விரிசல்களுக்கு வாய்ப்புகள் மிக மிக குறைவு. இதன் வலிமை அதிகமாக இருப்பதுடன் இப்படி பட்ட முறையில் குடியிருப்பை வேகமாகவும், தரமாகவும் காட்டமுடியும் என தெரிவித்தார்.

மேலும் படிக்க