• Download mobile app
19 Sep 2024, ThursdayEdition - 3144
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ப்ரீ பிக்சிங்,அட்வான்ஸ் வொர்க்; கோவை மாநகராட்சி டெண்டர் ஒதுக்கீட்டில் ஏகப்பட்ட முறைகேடு

September 18, 2024 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர் நல சங்கம் (CCCA) சார்பில் தலைவர் உதயகுமார்,செயலாளர் KCP சந்திரபிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கோவை மாநகராட்சி நகர பொறியாளர் அன்பழகன் பணியிடமாறுதல் செய்யப்பட்டுள்ளார்.டெண்டர் ஒதுக்கீடு விவகாரத்தில் இவர் பணியிட மாறுதல் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநகராட்சியில் டெண்டர் ஒதுக்கீடு கடந்த இரண்டு ஆண்டாக முறையாக நடக்கவில்லை. டெண்டர் விண்ணப்பம் அளித்தால் ஏதாவது காரணம் காட்டி அதை நிராகரிப்பதும் எதுவும் செய்ய முடியாவிட்டால் டெண்டரை ரத்து செய்வதும் அடிக்கடி நடக்கிறது. பிரீ பிக்சிங் முறையில் ஏற்கனவே டெண்டரை யார் யாருக்கு தரவேண்டும் என முன்பே முடிவு செய்து விடுகிறார்கள். அதை மீறி யாராவது டெண்டர் விண்ணப்பம் வழங்கினால் அதை வாபஸ் பெற மிரட்டுவது மீறிப் பணி எடுத்தால் பில் வழங்காமல் நிறுத்தி வைப்பதும் நடக்கிறது.

மாநகராட்சியில் பொறியியல் பிரிவு , டிராப்ட் பிரிவு போன்றவற்றில் டெண்டர் விண்ணப்பங்கள் முறையாக ஏற்கப்படுவதில்லை.இந்த விவகாரம் தொடர்பாக சங்கத்தின் சார்பில் பலமுறை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதற்கு தீர்வு காண டிராப்ட் பிரிவு (டி மேன் செக்சன்) மற்றும் டெண்டர் இறுதி செய்யும் கமிட்டி அலுவலர்கள் (tender scrutiny committee) பல ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள். இவர்களை இடமாற்றம் செய்ய வேண்டும். ஒப்பந்தம் தொடர்பான விண்ணப்பங்களை முறையாக கையாள வேண்டும்.தகுதியான விண்ணப்பங்களுக்கு பணி உத்தரவு வழங்க வேண்டும்.

ஒப்பந்தம் எடுக்க தகுதியில்லாத, போதுமான முன் அனுபவம் இல்லாத,
பிட் கெப்பாசிட்டி இல்லாத ஒப்பந்த நிறுவனங்களுக்கு பணி உத்தரவு வழங்கப்படுகிறது.‌ டிஜிட்டல் கையெழுத்து நடைமுறை கடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேலாக இருக்கிறது. ஆனால் இப்பொழுதும் கோவை மாநகராட்சியில் ஒப்பந்த நிறுவனத்தினர் கையெழுத்து போடவில்லை எனக் கூறி விண்ணப்பங்களை நிராகரிக்கும் செயல் நடக்கிறது.

அட்வான்ஸ் வொர்க் என்ற பெயரில் டெண்டர் விடாமல் முன்கூட்டியே திட்டப் பணிகளை மேற்கொள்ளும் நடைமுறை அதிகமாகிவிட்டது.மார்க்கெட் மதிப்பை காட்டிலும் 5 மடங்கு கூடுதல் விலை வைத்து பொருட்களை வாங்கியதாக கணக்கு காட்டுவதும் நடக்கிறது. குறிப்பாக டிவி , கம்ப்யூட்டர் போன்றவற்றுக்கு செட்டியூல் ஆப் ரேட்டில் விலை விவரங்கள் குறிப்பிடப்படுவதில்லை. இவற்றிற்கு மாநகராட்சி அதிகாரிகள் உதவியுடன் கூடுதல் தொகை நிர்ணயம் செய்து முறைகேடு செய்து வருகிறார்கள்.

இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறைக்கும் புகார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விதிமுறை மீறல் மற்றும் முறைகேட்டுக்கு துணை போகும் மாநகராட்சி அதிகாரிகள் விரைவில் லஞ்ச ஒழிப்பு விசாரணையில் சிக்கும் நிலைமை இருக்கிறது.

திட்ட மதிப்பீடு 75 லட்ச ரூபாய் வரை இரண்டு கவர் டெண்டர் சிஸ்டம் நடைமுறை தேவையில்லை.ஆனால் இப்பொழுது 20 லட்ச ரூபாய் மதிப்பிலான திட்ட பணிகளுக்கு கூட இரண்டு கவர் சிஸ்டம் தேவை என மாநகராட்சியில் இல்லாத விதிமுறைகளை காட்டி டெண்டர் விண்ணப்பம் நிராகரிக்கிறார்கள். முறைகேடுகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் உடந்தையாக இல்லாமல் நேர்மையாக டெண்டர் ஒதுக்கீடு செய்து வழங்க வேண்டும் என சங்கம் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் படிக்க